உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி ராமர் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு அமெரிக்கா விசா மறுப்பு

அயோத்தி ராமர் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு அமெரிக்கா விசா மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அயோத்தி ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி அருண் யோகிராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்துள்ளது. அமெரிக்காவில் நடக்க உள்ள உலக கன்னட மாநாடு நிகழ்ச்சியில் பங்கேற்க, யோகிராஜ் விண்ணப்பித்திருந்தார்.அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி நடந்தது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலையானது கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் என்பவரால் வடிவமைக்கப் பட்டதாகும். ராமர் சிலையை வடிவமைத்த பிறகு, அருண் யோகிராஜீக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

தொழில் தான் முக்கியம்

மைசூர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., படித்த அருண் யோகிராஜ், தனியார் நிறுவனத்தில் மனிதவளத் துறையில் ஆறு மாதங்கள் பயிற்சி பெற்றார். இவர் குடும்ப பாரம்பரியமான சிலை செய்யும் தொழிலை முன்னெடுத்துச் செல்ல, தனியார் துறை வேலையை விட்டுவிட்டு மைசூருக்கு வந்துவிட்டார்.

செதுக்கிய சிலைகள் என்னென்ன?

இவர் கேதார்நாத்தில் வைக்கப்பட்டுள்ள 12 அடி உயர ஆதி சங்கராச்சாரியார் சிலை, டில்லியில் உள்ள இந்தியா கேட் அருகே நிறுவப்பட்டுள்ள சுபாஷ் சந்திரபோஸ் சிலை, மைசூர் மாவட்டத்தில் உள்ள 21 அடி உயர அனுமன் சிலை, 15 அடி உயர அம்பேத்கர் சிலை, ஆறு அடி உயர நந்தியின் சிலை ஆகியவற்றை செதுக்கியுள்ளார்.

விசா மறுப்பு

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் 20 நாள் பயணமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சிற்பி அருண் யோகிராஜ் அமெரிக்கா செல்லவிருந்தார். அமெரிக்காவின் கன்னட கூட்டாஸ் சங்கம் சார்பில் நடக்க உள்ள, உலக கன்னட மாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். இதனால் விசாவிற்கு விண்ணப்பித்திருந்தார். விசா வழங்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால் விண்ணப்பத்தை ஏன் நிராகரித்தது என்பதற்கான காரணத்தை, அமெரிக்க தூதரகம் இதுவரை தெரிவிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Ravi shangar
ஆக 17, 2024 11:08

எதுக்கு அமெரிக்கா போடறீங்க? பாவம் பன்னிற பூமி ?


Jamal Mohamed
ஆக 16, 2024 15:18

ஜோபைடன் சிலையை வடித்து அவரை அமெரிக்கா ஜனாதிபதி ஆக்கிவிடுவார் என்கிற பயம் சாமியோ


M Palaniappan
ஆக 16, 2024 13:56

௮மெரிக்கா செல்வதை தவி௫ங்கள். இது பேஷனாகிவிட்டது.


Musical Knots
ஆக 16, 2024 13:25

சரியாக படிங்க சந்திரசேகர். அமெரிக்கா தூதரகம் தெரிவிக்கவில்லை. சிற்பி தெரிவிக்கவில்லை என்று சொல்லவில்லை. பிரதமர் மோடி அவர்களுக்கு மறுத்த பின் என்ன ஆனது? அமெரிக்கா தூதரகம் ஒருமுறைக்கு பல முறை யோசிக்கவேண்டும்.


SUBBIAH RAMASAMY
ஆக 15, 2024 22:00

அமெரிக்க தூதரகம் காரணத்தை கூறவில்லை. திரும்ப படிக்கவும். .


chandrasekar
ஆக 15, 2024 17:04

எனக்கும் இந்த கருத்து சரி என்றே தோன்றுகிறது. நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை சிற்பி ஏன் வெளியிடவில்லை.


Yuvaraj Velumani
ஆக 15, 2024 19:52

தூதரகம் தெரிவிக்கவில்லை


SANKAR
ஆக 15, 2024 21:17

when visa office rejects without stating any reason how can this man know and state reason?!


Sainathan Veeraraghavan
ஆக 15, 2024 15:33

IT IS NOT MANDATORY FOR AMERICAN VISA OFFICERS TO INFORM THE APPLICANTS REASONS FOR REFUSAL OF VISAS. EVEN HON. MODIJI WAS REFUSED U.S VISA PREVIOUSLY.


SANKAR
ஆக 15, 2024 16:03

there was a valid reason for refusal of visa to Modi.As you say no reason was given at that time but a decade later US govt spokesman revealed the reason


Kundalakesi
ஆக 15, 2024 14:31

US always has double face. Even our chats and searches are tracked


ஆரூர் ரங்
ஆக 15, 2024 14:01

அமெரிக்க விசாவுக்கு மோதி விண்ணப்பிக்காத போதே அவருக்கு வீசா மறுக்கப்பட்டதாக பொய்ச் செய்தியை பரப்பியது அமெரிக்க சார்பு ஊடகங்கள்தான்.இப்போதும் யாரையோ திருப்திப்படுத்த இந்த வேலையை செல்கிறார்கள்.


Bala
ஆக 15, 2024 13:59

பயங்கரமான செயலில் ஈடுபட்டிருக்கலாம்


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ