உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிக்கபல்லாபூர் தொகுதிக்கு வீரப்ப மொய்லி நெருக்கடி

சிக்கபல்லாபூர் தொகுதிக்கு வீரப்ப மொய்லி நெருக்கடி

சிக்கபல்லாபூர் : சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதியில் இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்று, எம்.பி.,யானவர் காங்., மூத்த தலைவர் வீரப்ப மொய்லி. 2019ல் மூன்றாவது முறையாக களமிறங்கினார். ஆனால் மோடி அலை வீசியதால், அவரால் வெற்றி பெற முடியவில்லை.இம்முறை இதே தொகுதியில் சீட் பெற, பல மாதங்களாகவே அவர் மேலிடக் கதவைத் தட்டுகிறார். ஆனால் ரக்ஷா ராமையாவும் சீட் கேட்டு முட்டி மோதுகிறார். மூத்த தலைவர்களுக்கு இம்முறை சீட் தர வேண்டாம் என, மாநில தலைமை முடிவு செய்து, பல தொகுதிகளில் இளம் தலைவர்களை வேட்பாளராக்கியது.அதேபோன்று சிக்கபல்லாபூர் தொகுதியில், ரக்ஷா ராமையாவை வேட்பாளராக்க வேண்டும் என, திட்டமிட்டது. இவரது பெயரை மட்டும், மத்திய தேர்தல் கமிட்டிக்கு சிபாரிசு செய்ய மேலிடம் தயாரானது.வீரப்ப மொய்லி டில்லி மேலிட அளவில், சீட் பெற முயற்சிக்கிறார். தனக்கே சீட் கொடுக்க வேண்டும் என, சோனியா, மல்லிகார்ஜுன கார்கே உட்பட, முக்கிய தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார். இதனால் சிக்கபல்லாபூர் தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்க முடியாமல் கட்சி தத்தளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை