உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லிக்கு தண்ணீர் திறக்க ஹிமாச்சல் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

டில்லிக்கு தண்ணீர் திறக்க ஹிமாச்சல் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் குடிநீர் பிரச்னையால் மக்கள் அவதி அடைந்து வருவதால், கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என ஹிமாச்சல் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.டில்லியில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. நகரின் பல்வேறு இடங்களில் கடுமையான வெப்ப அலையால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மக்கள் குடிநீருக்காக அல்லாடு கின்றனர். லாரிகளில் வரும் தண்ணீரை பிடிப்பதற்கு பெரும் போராட்டமே நடக்கிறது. கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை சமாளிக்க, உபரி நீரை திறந்து விட ஹரியானா அரசுக்கு உத்தரவிடக் கோரி, அமைச்சர் ஆதிஷி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

தண்ணீர் திறக்க உத்தரவு

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, விஸ்வநாதன் ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன்பு இன்று (ஜூன் 06) விசாரணைக்கு வந்தது. அப்போது, , '' டில்லியில் குடிநீர் பிரச்னையால் மக்கள் அவதி அடைந்து வருவதால், ஹிமாச்சல் அரசு உபரிநீரை 137 கன அடி திறந்துவிட வேண்டும். இதனை ஹரியானா அரசு முறையாக டில்லிக்கு கொண்டு சேர்க்க வேண்டும். டில்லிக்கு வழங்கப்படும் நீரை எக்காரணம் கொண்டும் தடுத்து வைக்க கூடாது. குடிநீரை வீணாகாத வகையில் டில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என நீதிபதிகள் உத்தவிட்டுள்ளனர்.

நடவடிக்கை

டில்லியில் குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடும் நிலையில், ஹிமாச்சல் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் டில்லி மக்கள் குடிநீர் பிரச்னையில் இருந்து மீண்டும், நிம்மதி அடையும் சூழல் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Anand
ஜூன் 06, 2024 15:38

ஹிமாச்சல் மற்றும் டெல்லியில் கூட்டுக்களவாணிகள் தான் ஆட்சி புரிகிறார்கள், பிறகு எதற்கு கோர்ட் கேஸ் என நாடகம் நடிப்புக்கள்?


Bala Paddy
ஜூன் 06, 2024 14:53

ஹரியாணாவுக்கு தண்ணி இல்லேன்னா நீதிபதி வந்து கொடுப்பாரா?


ganapathy
ஜூன் 06, 2024 14:20

ஆனா 10 வருசமாக தண்ணீ அரசியல் செய்து தில்லி மக்களை ஏமாற்றிய கேஜரிவாலை நீதிபதி கேள்வி கேட்க மாட்டார்ன்னு எங்களுக்கு முன்னாடியே தெரியுமே?


Lion Drsekar
ஜூன் 06, 2024 13:35

இதே போன்று வாட்சப்பில் வீடியோ ஒன்று வந்துகொண்டு இருக்கிறதே? தேர்தலில் வெற்றி பெற்றால் ஒவ்வொரு பெண்மணிகளுக்கும் ஒரு லட்சம் கொடுக்கப்படும் என்று எல்லோருக்கும் தேர்தலுக்கு முன்பாகவே ஒரு அட்டையைக் கொடுத்து, அதை வாங்கிய ஏழை குடும்பப்பெண்கள் அந்த அலுவலகத்துக்கு நடையாய் நடந்து கொண்டு வருகிறார்கள், அதுமட்டும் இல்லை அந்த தலைவர் பேசிய வீடியோவும் வெளிவந்து கொண்டு இருக்கிறதே , இது இவர்கள் கண்களில் படவில்லையா , ஓய்வு ஏற்ற அரசு ஊழியர்கள் எங்கே போனார்கள் , அவர்களுக்கு இது ஜனநாயக நாட்டில் அத்துமீறலாக தெரியவில்லையா ? தானாக முன்வந்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்தால் பாராட்டலாம், வந்தே மாதரம்


GMM
ஜூன் 06, 2024 13:23

நீதிமன்றம் நீர் திறக்க கூறும் போது, டெல்லி யூனியன், இமாச்சல, ஹரியானா மாநிலத்திற்கு கைமாறு என்ன செய்ய வேண்டும் என்று கூற வேண்டும். இது இல்லாத போது உத்தரவு சம நிலையில் இருக்காது. குடிநீர் தமிழகத்தில் ஒரு லிட்டர் 20 ரூபாய். 137 கன அடி உபரி நீர்? இமாச்சல காங்கிரஸ் ஆட்சி. டெல்லி ஆம் ஆத்மி. ஒரே புள்ளி கூட்டணி. பிஜேபி வராது. இருவரும் ஏன் அரசியல் ரீதியாக பேசி தீர்க்க விருப்பவில்லை? அதற்கு முன் மன்றம் ஏன் தலியிடுகிறது? சில மாநிலங்கள் இலவசம் மூலம் அரசியல். இதனை தடுத்து நிறுத்த யாருக்கும் விருப்பம் இல்லை. வாழ்நாள் கடனாக கொடுத்து ஏழையை காக்க வேண்டும். இலவசம் குழந்தை, முதியவருக்கு மட்டும்.


r ravichandran
ஜூன் 06, 2024 12:45

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இமாச்சல பிரதேசம். இதற்கு மேல் சொல்ல முடியுமா.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை