உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முல்லை பெரியாறு உடைந்தால் யார் பொறுப்பு?: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

முல்லை பெரியாறு உடைந்தால் யார் பொறுப்பு?: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: “முல்லை பெரியாறு அணை உடைந்தால் ஏற்படும் சேதத்துக்கு யார் பொறுப்பேற்பர்?” என, மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி கேள்வி எழுப்பியுள்ளார்.கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகரும், மத்திய பெட்ரோலியம், சுற்றுலாத்துறை இணை அமைச்சருமான சுரேஷ் கோபி பேசியதாவது:முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கவலை எழுப்பும் சமூக வலைதளப் பதிவு ஒன்றை சமீபத்தில் கண்டேன். அணை இடிந்து விழுமா, இல்லையா என்ற கேள்வி என் மனதில் இடிமுழக்கம் போல நிற்கிறது.ஒருவேளை அணை உடைந்தால் யார் பொறுப்பு? அணையில் தண்ணீர் நிரப்புவதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிடும் நீதிமன்றம் பொறுப்பேற்குமா? அல்லது அந்த உத்தரவுகளை அமல்படுத்தும் அதிகாரிகள் பொறுப்பேற்பரா?விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கு பதில் வேண்டும். மீண்டும் ஒரு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ளும் சக்தி கேரளாவுக்கு இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தமிழ்வேள்
ஆக 19, 2024 10:57

பெரியாற்று நீரை தேக்கி புனல் மின்சக்தி எடுக்க இடுக்கியில் 354 அடி உயர அணைக்கட்டு கட்டப்பட்டது .அந்த அணை உடைந்தால் இடுக்கி மாவட்டம் தென்றல் தாலாட்டும் பூஞ்சோலை ஆக மாறிவிடுமா ? இந்த அணை முழு கொள்ளளவை எட்ட பெரியாறு அணையை உடைக்க மலையாளி முயற்சி ....மின்சாரம் எடுத்து அதை நம்மகே விற்பான் .. இடுக்கி அணையால் கேரளத்த்துக்கு ஆபத்து இல்லையா ? என எந்த தமிழ் அரசியவாதியும் கேட்பதில்ல்லை .காரணம் பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ரெசார்ட்டுகள் எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஆளுக்கு ஒன்றாக இருக்கின்றன . அதனால் தான் அணைநீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதையும் தமிழகம் கண்டுகொள்வதில்லை .


Swaminathan L
ஆக 19, 2024 10:12

அப்ப சரி. விரைவிலேயே முல்லைப் பெரியார் புது அணை மற்றும் மேகேதாது அணை கட்டப் படலாம். காற்றை உண்டாக்கி தூற்றிக் கொள்ள பாஜகவுக்கா முடியாது?


Dharmavaan
ஆக 19, 2024 07:23

அணை உடையாது என்று வல்லுநர் கூறும்போது இந்த புரளியை கிளப்புவது சதி திட்டம்.கேவலம்


R.RAMACHANDRAN
ஆக 19, 2024 07:05

வஞ்சகமாக செயல்பட்டால் இயற்கை கண்ணை மூடிக்கொண்டிருக்காது.சீற்றம் கொண்டு வஞ்சகம் செய்பவர்களுக்கு பாடம் கற்பிக்கும்.இதுதான் இயற்கையின் நியதி.


Kasimani Baskaran
ஆக 19, 2024 05:52

முல்லைப்பெரியாறு என்ன திராவிட மதத்தினர் கட்டிய கொள்ளிடம் தடுப்பணையா உடனே உடைந்து போக.


N Sasikumar Yadhav
ஆக 19, 2024 02:06

அப்ப பாரதத்தில் இருக்கிற அனைத்து அணைகளையும் இடித்து தள்ளுங்கள் எவனும் அணைகள் கட்டக்கூடாது


Natarajan Ramanathan
ஆக 19, 2024 01:59

இதென்ன கேள்வி? ஆணை உடைந்தால் அதில் உள்ள தண்ணீர்தான் பொறுப்பேற்க வேண்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை