உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டியா கூட்டணியில் யார் பிரதமர்: 48 மணி நேரத்தில் அறிவிக்குமாம் காங்.,

இண்டியா கூட்டணியில் யார் பிரதமர்: 48 மணி நேரத்தில் அறிவிக்குமாம் காங்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 'இண்டியா' கூட்டணியில் அதிக இடங்களை பெறும் கட்சிக்கே தலைமை பொறுப்பேற்க உரிமை கோரும் தகுதி உள்ளது. 48 மணி நேரத்தில் பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம் என, காங்., தெரிவித்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி தியானம் செய்யும் கன்னியாகுமரியில் இருந்து தான், 2022, செப்., 7ல் ராகுல் நடைபயணத்தை துவக்கினார். ஓய்வுக்கு பின் வேறு வேலையின்றி தியானம் செய்வதே சிறந்தது. அதை மோடி நன்றாக உணர்ந்து வைத்துள்ளார்.பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களுக்கு மேல் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். கடந்த 2004ல் பா.ஜ.,வின், 'இந்தியா ஒளிர்கிறது' பிரசாரத்துக்கு மத்தியில் காங்., வெற்றி பெற்ற வரலாறு, 2024ல் மீண்டும் திரும்ப உள்ளது.அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் எங்கள் பக்கம் வர ஆர்வம் காட்டுவர். அவர்களை சேர்த்துக் கொள்வது குறித்து காங்., தலைமை முடிவு செய்யும்.கடந்த 2004 லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 13ல் அறிவிக்கப்பட்டது. மே 16ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவானது. பிரதமராக மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற பேச்சு மே 17 முதல் வலம் வர துவங்கியது.அது உறுதி செய்ய மூன்று நாட்கள் ஆனது. ஆனால், இந்த முறை, தேர்தல் முடிவு வெளியாகி, இண்டியா கூட்டணி வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் பிரதமர் யார் என்பதை இண்டியா கூட்டணி தேர்வு செய்து அறிவிக்கும். கூட்டணியில் அதிக இடங்களை பெறும் கட்சியே, தலைமை பொறுப்பேற்க உரிமை கோரும் தகுதி உள்ளது. இவ்வாறு கூறினார்.

பிரிவினையை ஏற்படுத்தும் பிரதமரின் பேச்சு: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குமுறல்

ஏழாம் கட்ட லோக்சபா தேர்தல் நாளை நடக்கவுள்ள நிலையில், பஞ்சாப் வாக்காளர்களுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் வாயிலாக சில கோரிக்கைகளை விடுத்துள்ளார்.அதன் விபரம்: இந்த தேர்தல் பிரசாரங்களின் போது நடக்கும் அரசியல் பேச்சுக்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். பிரதமர் மோடியின் பேச்சு வெறுப்புணர்வை துாண்டி, பிரிவினையை ஏற்படுத்துவதாக உள்ளது. பொதுவெளியில் பேசுவதன் கண்ணியத்தை குறைத்து, அதன் வாயிலாக பிரதமர் பதவியின் மேல் உள்ள மதிப்பை சீர்குலைத்த முதல் பிரதமர் மோடி தான்.கடந்த காலத்தில் எந்தவொரு பிரதமரும் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறிவைத்து இதுபோன்ற வெறுப்புணர்வு துாண்டும் முரட்டுத்தனமான வார்த்தைகளை பேசியதில்லை.என்னை பற்றியும் சில தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். என் வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு சார்பாக நான் செயல்பட்டது இல்லை.இந்த முரணான சக்திகளிடம் இருந்து நம் நாட்டை காப்பாற்றுவதே இப்போது நம் கடமை.இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 60 )

M Ramachandran
ஜூன் 03, 2024 19:51

உதிரும் இலையாக இருக்கும் ஜெயராம் ரமேஷ் நீங்கள் தான் கான்க்ரீசைய்ய தலமை தாங்கி வழி நடத்தி கெடுத்து கொடுக்க வேண்டும்


K V Ramadoss
ஜூன் 03, 2024 18:18

நாளையிலிருந்து 48 மணி நேரத்தில் அனைவரும் தெறித்து ஓடி விடுவர்.


Kuppan
ஜூன் 03, 2024 16:55

இது எப்படி இருக்குன்னா மாப்பிள்ளையை கல்யாணத்து அன்று தாலி காட்டும் நேரம் முடிவு செய்வார்களாம், இன்னோருத்தன் சொல்றான் வருசத்துக்கு ஒரு மாப்பிளைனு ஐந்து மாப்பிளையாம் ?? இன்னோருத்தன் சொல்றன் மொத்தமே இரண்டு சீட்ல நிக்கிறவனும் மாப்பிள்ளைன்னு ?


Sivaraman
ஜூன் 03, 2024 13:21

கூட்டணித்தலைவர்கள் பெயரைப் படித்தால் போதும் . ஐந்து நிமிடம் போதும் . அனைவரும் பிரதமர்கள்


Kuppan
ஜூன் 03, 2024 17:01

கூட்டணி தலைவர்கள் உப தலைவர்கள் பெயரை படித்தாலே இவங்க சொன்ன 48 மணி நேரம் முடிந்து விடும் அப்புறம் எங்க தேர்ந்து எடுப்பது


Tamilnesan
ஜூன் 01, 2024 22:19

இன்னும் பெண்ணே பார்க்கவில்லை .......அதற்கு முன்ன பொறக்கப்போற குழந்தைக்கு பேர் வைக்க வந்துட்டானுங்க அரை வேக்காட்டு அரை டவுசர் பயலுவ


Vaduvooraan
ஜூன் 01, 2024 19:51

யார் என்ன வேணா சொல்லுங்க..எங்க தளபதி கைகாட்டுற ஆளுதான் பிரதமர்


Chandhra Mouleeswaran MK
ஜூன் 01, 2024 11:24

ஆமைய்யா ஆமாமைய்யா ஜெய் ராம் ரமேஷ் காரு "நாற்பத்தெட்டு மணி நேரத்தில் பிரதமர் பெயர் அறிவிக்கப் படும்" என்பதை நாங்கள் அத்தனை பேரும் மிக மிக நன்றாக அறிந்திருக்கிறோம் அன்று ஒருநாள் அந்த ஊமாண்டி மௌனமோகன் சிங் தேர்வானார் இல்லையா அது மாதிரி இப்போதும் அவர்தான் அண்டோனியோ மைனோ அண்டு கம்பெணியாக் தயாராக்கப் படுகிறார் என்பதையும் அதைவிட நன்றாக அறிவோம் ச்சப்பக்கா என்று ஒரு அச்சு அச்சல் ரப்பர் ஸ்டாம்ப் பெண்டாட்டி கூடக் கூட வராத அளவிற்குச் செல்வாக்கு ஒற்றை நயாப் பைசாக்கூட இல்லாத ஒரு அப்பிராணி அம்மாஞ்சி


cbonf
ஜூன் 01, 2024 00:53

இந்த முறை காங்கிரஸ் டபுள் டிஜிட் கூட வருமா என சந்தேகப்படுகிறார்கள்


Venkat, UAE
மே 31, 2024 18:55

இப்போ வயசுக்கு வந்தா என்ன வராட்ட என்ன.


theruvasagan
மே 31, 2024 16:19

ஊரே கூடி தேர இழுக்கணும்னு எல்லோரும் முடிவு செய்வாங்க. தேர் இழுக்கும் சமயம் வரும்போது ஒருத்தன் மட்டும் நான் தேர்ல ஏறி உக்காந்துப்பேன். மத்த எல்லாரும் தேரை இழுக்கலாம்னு சொல்லுவானாம். கலியாணத்தில் கலந்துகொள்ள வந்தவன் மாப்பிள்ளை மணையிலே நான்தான் உக்காரணும்னு அடாவடி பண்ற மாதிரிதான் இருக்கும் இவனுகளோட லொள்ளு.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை