உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., தலைவர்கள் சிறை செல்வது ஏன்? பெரிய புத்தகம் உள்ளதாக ஈஸ்வரப்பா சாடல்

காங்., தலைவர்கள் சிறை செல்வது ஏன்? பெரிய புத்தகம் உள்ளதாக ஈஸ்வரப்பா சாடல்

ஷிவமொகா : ''வாய்க்கு வந்தபடி ராகுல் பேசுகிறார். அவரது கட்சியில் சிறை சென்றவர்கள் உள்ளனர். அவர்கள் என்ன விஷயத்துக்காக சிறை சென்றனர் என்பதை விளக்க பெரிய புத்தகமே உள்ளது,'' என, முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.ஷிவமொகா லோக்சபா தொகுதியில், முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா, சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவர் பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திராவுக்கு இடையூறாக இருக்கிறார்.ஷிவமொகாவில் நேற்று அவர் கூறியதாவது: பொதுமக்களுக்கு சொம்பு கொடுத்து, மக்களை ஏமாற்றியது காங்கிரஸ் தான். பிரதமர் நரேந்திர மோடி குறித்து, முதல்வர் சித்தராமையா பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்.இதற்கு மத்திய அரசு புள்ளி விபரங்களுடன் விளம்பரம் கொடுத்து. மக்களுக்கு விளக்கம் அளித்துள்ளது. லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு மக்கள் சொம்பு கொடுத்து வீட்டுக்கு அனுப்புவர்.பிரஜ்வல் விஷயம் குறித்து பேசுவதற்கு விரும்பவில்லை. வாய்க்கு வந்தபடி ராகுல் பேசுகிறார். அவரது கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் சிறை சென்றவர்கள். அவர்கள் என்ன விஷயத்துக்காக சிறை சென்றனர் என்பதை விளக்க பெரிய புத்தகமே உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை