உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனைத்து துறை பணி நியமனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீதம்

அனைத்து துறை பணி நியமனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீதம்

இளைஞர் மேம்பாடு, விளையாட்டு

l கடந்தாண்டு போலீஸ், வனத்துறை பணி நியமனங்களில், விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீடு என குறிப்பிட்டிருந்தோம். இந்தாண்டு அனைத்து துறைகளிலும் 2 சதவீத இடஒதுக்கீடுl பெங்களூரு வடக்கு தாலுகாவில் தனியார் பொது கூட்டமைப்புடன் 70 ஏக்கர் நிலத்தில் சர்வதேசம் மற்றும் அதிநவீன விளையாட்டு நகரம் உருவாக்கப்படும்l பெங்களூரில் நான்கு இடங்களில் சர்வதேச தரத்தில் விளையாட்டு காம்பிளக்ஸ்கள் கட்டப்படும்l மாநிலத்தில் பல்வேறு விளையாட்டுகளை வளர்ச்சி அடைய வைக்கவும், விளையாட்டு வீரர்களை ஊக்கவிக்குவும், ரைபிள் ஷூட்டிங் சங்கம், ஹாக்கி கர்நாடகா, அமெச்சூர் குத்துச்சண்டை சங்கம், வீல்வித்தை சங்கம், தடகளம் சங்கம், காயாகிங் அகாடமி, விஜயபுரா சைக்கிள் அகாடமி, கத்திச்சண்டை சங்கங்களுக்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கீடுl விளையாட்டு வீரர்களுக்கு மாநில அளவில் ஒலிம்பிக் போட்டியும்; தங்கள் திறமையை வளர்த்து கொள்ளும் வகையில், ஆண்டுதோறும் 14 வயதுக்கு உட்பட்டோருக்கு 'மினி ஒலிம்பிக்' போட்டியும் நடத்தப்படும்.l வரவிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி, வெண்கலம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முறையே 6 கோடி, 4 கோடி, 3 கோடி ரூபாய் வழங்கப்படும்l ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முறையே 35 லட்சம், 25 லட்சம், 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.l தேசியம் அல்லது சர்வதேச அளவில் விளையாட்டில் பங்கேற்று காயமடைவோருக்கு, கர்நாடக அரசு சார்பில் சுகாதார காப்பீடு வசதி செய்யப்படும்l அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தின் 14 இடங்களில் 35 கோடி ரூபாய் செலவில் மகளிர் விளையாட்டு விடுதிகள்; குடகு மாவட்டம், பொன்னம்பேட்டில் 5 கோடி ரூபாய் செலவில் சொந்தமாக விளையாட்டு விடுதி கட்டப்படும். பல்லாரியில் விளையாட்டு மற்றும் விடுதியை சீரமைக்க, 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை