மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.93,760!
7 hour(s) ago | 2
அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
8 hour(s) ago | 21
கவுகாத்தி: கவுகாத்தி டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி, இந்திய அணிக்கு 549 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கோல்கட்டா டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது டெஸ்ட், அசாமின் கவுகாத்தியில் நடக்கிறது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. இந்திய அணி 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதை தொடர்ந்து தென் ஆப்ரிக்கா அணி, 288 ரன்கள் முன்னிலையோடு, 2வது இன்னிங்சை தொடங்கியது. தென் ஆப்ரிக்க அணியின் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் சிறப்பாக விளையாடி 94 ரன்கள் சேர்த்தார். மேலும் அந்த அணியின் ரியான் ரிக்கெல்டன் 35 ரன்களும், எய்டன் மார்க்ரம் 29 ரன்களும், டோனி டி ஷோர்ஷி 49 ரன்களும், முல்டர் ஆட்டமிழக்காமல் 35 ரன்களும் சேர்க்க, அந்த அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன்மூலம் தென் ஆப்ரிக்க அணி, 549 ரன்கள் என இந்திய அணிக்கு கடின இலக்கு நிர்ணயித்தது. 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி அளித்தது. ஜெய்ஸ்வால் ஜேன்சன் பந்தில் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் ஹார்மர் பந்தில் 6 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 4வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் சேர்த்து திணறி வருகிறது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 522 ரன்கள் தேவைப்படுகிறது. அவ்வாறு வெற்றி பெற்றால் தொடரை 1-1 என்று சமன் செய்யலாம்.
7 hour(s) ago | 2
8 hour(s) ago | 21