| ADDED : ஜன 29, 2024 05:15 PM
கோல்கட்டா: நாடு முழுவதும் ஒரு வாரத்துக்குள் சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் பேசினார். மேற்கு வங்கத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் சாந்தனு தாக்கூர் பேசுகையில், ‛‛ இந்த மேடையில் ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன். இன்னும் 7 நாட்களுக்குள் மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சி.ஏ.ஏ., சட்டம் அமல்படுத்தப்படும்'' எனக் குறிப்பிட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fgth2nxx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு,‛‛லோக்சபா தேர்தலுக்கு முன் மக்களை பயமுறுத்துவதற்காக சி.ஏ.ஏ., சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது என நிருபர்கள் சந்திப்பில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பதிலடி கொடுத்துள்ளார். மேலும், தயவுசெய்து வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சேர்க்க வேண்டும். அப்பொழுது தான் டில்லியில் உள்ள மத்திய அரசு வெளியேற்ற மாட்டார்கள் என மம்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.