உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "யாத்திரையில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வரவில்லை": அகிலேஷ் குற்றச்சாட்டும், காங்., பதிலும்!

"யாத்திரையில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வரவில்லை": அகிலேஷ் குற்றச்சாட்டும், காங்., பதிலும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: யாத்திரையில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வரவில்லை என உ.பி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு,'' விரிவான பயணத்திட்ட விவரங்கள் மற்றும் நிகழ்வுகள் இறுதி செய்யப்பட்டவுடன் கூட்டணி கட்சிகளுக்கு தெரிவிக்கப்படும்'' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் பதில் அளித்துள்ளார்.

அகிலேஷ் குற்றச்சாட்டு

லோக்சபா தேர்தலையொட்டி, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இரண்டாம் கட்ட 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை'யை காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடந்த ஜன.,14ம் தேதி மணிப்பூரில் துவக்கினார். காங்கிரஸ் கட்சியின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையில் கலந்து கொள்ள அழைப்பிதழ் தனக்கு கிடைக்கவில்லை என இண்டியா கூட்டணி உறுப்பினரான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டி இருந்தார்.

காங்., பதில்

இதற்கு பதில் அளித்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியிருப்பதாவது: விரிவான பயணத்திட்ட விவரங்கள் மற்றும் நிகழ்வுகள் இறுதி செய்யப்பட்ட உடன் கூட்டணி கட்சிகளுக்கு தெரிவிக்கப்படும். அவர்களின் பங்கேற்பு கூட்டணியை வலுவாக்கும். பிப்.16ம் தேதி யாத்திரை உத்தர பிரதேசத்தில் நுழையும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார். இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் காங்கிரசுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
பிப் 05, 2024 08:21

அயோத்தி ராமர் கோவில் விழாவுக்கு அழைப்பிதழ் கொடுத்தும் இவர் போகவில்லை. கொடுத்தால் போகமாட்டார்கள். கொடுக்காவிட்டால் புகார் செய்வார்கள். உண்மையான அரசியல்வாதிகள் இவர்கள்தான்.


J.V. Iyer
பிப் 05, 2024 06:44

ஹா..ஹா..இதையெல்லாம் காங்கிரேசிடம் எதிர்பார்க்க முடியுமா?


sankar
பிப் 05, 2024 06:40

காங்கிரஸ் யாரையும் அழைக்காமல் - தானே அரசியல் செய்வதுதான் சிறப்பு - அப்போதுதான் மோடியின் அரசியலை எதிர்கொள்ளமுடியும் - திமுக, லாலுக்காட்சி, முலாயம், மாயாவதி, மம்தா, கெஜ்ரிவால் போன்ற ஊழல்வாதிகள் ஓரம்கட்டிவிட்டு, தனித்து களம் காணுங்கள் - அப்போதுதான் உங்களுக்கு மரியாதை திரும்ப வரும் - ஒரு பழைய காமராஜ் காங்கிரகாரனா இதை சொல்கிறேன்


Suppan
பிப் 04, 2024 17:27

அழைப்பிதழ் வரவில்லை என்றால் செலவு மிச்சம்.


பேசும் தமிழன்
பிப் 04, 2024 14:52

கான் கிராஸ் கட்சி ....இந்த நாட்டுக்கு வேண்டாத ...தேவையில்லாத சுமை ....அதனை யாரும் முதுகில் சுமக்க வேண்டாம் !!!!


Palanisamy Sekar
பிப் 04, 2024 14:48

பொறுத்திருங்களேன்..தேர்தல் முடிவுக்கு பின்னர் எல்லோருமே சேர்ந்து iNIDA கூட்டணி க்கு இறுதியாத்திரை நடக்கும் பொது நிச்சயம் கூப்பிடுவார்கள்..


விடியல்
பிப் 04, 2024 14:41

ஆட்சியில் இருந்த போது எப்படி பிளானிங் செய்தார்களோ அப்படியே இப்போதும் இந்த கட்சி நிர்வாகம் இரண்டுமே. வேலை முடிந்த பிறகு அதற்கு ஏற்றார் போல் நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு செய்வார்கள்


முருகன்
பிப் 04, 2024 14:35

கூட்டணியை விட்டு விலக காரணம் தேடுகிறார் இவரெல்லாம் காலத்திற்கும் எதிர்க்கட்சி தான்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை