உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் நம்பிக்கை இழந்தால் என்ன செய்வீர்கள்?: மே.வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

மக்கள் நம்பிக்கை இழந்தால் என்ன செய்வீர்கள்?: மே.வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடில்லி: 25 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை கோல்கட்டா உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ‛ அரசுப் பணி நியமனங்களில் முறைகேடு நடந்தால், மக்கள் நம்பிக்கை இழப்பர். அதனை எப்படி எதிர்கொள்வீர்கள்‛ என மேற்கு வங்க அரசிடம் கேள்வி எழுப்பினார்.மேற்கு வங்கத்தில் 2016 ம் ஆண்டுக்கு பிறகு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட 25 ஆயிரம் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்தை கோல்கட்டா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கு எதிராக மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது மே.வங்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீரஜ் கிருஷ்ணன் கவுல் கூறுகையில், 25 ஆயிரம் ஆசிரியர் பணி நியமனங்கள் சட்ட விரோதமாக நடந்தது என சி.பி.ஐ., கூட வழக்குப்பதிவு செய்யவில்லை. இத்தகைய உத்தரவு தொடர்ந்து இருக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.மே.வங்க பள்ளி சேவை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வாதிடுகையில், பணி நியமனங்களை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றார்.அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், ஓஎம்ஆர் விடைத்தாள்களின் ஓஎம்ஆர் ஷீட்கள் மற்றும் அதன் நகல்கள் அழிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினார். அதற்கு உறுதி செய்வது போல் ஜெய்தீப் குப்தா பதிலளித்தார்.தொடர்ந்து சந்திரசூட் கூறுகையில், டிஜிட்டல் விடைத்தாள்களை பாதுகாப்பாக வைக்க வேண்டியது தேர்வு வாரியத்தின் கடமை என்றார். இதற்கு ஜெய்தீப் குப்தா கூறுகையில், நியமனங்கள் தொடர்பான பணிகளை அவுட்சோர்சிங் முறையில் அளிக்கப்பட்டது என்றார்.இதற்கு தலைமை நீதிபதி, யாரிடம் அளிக்கப்பட்டது. சிபிஐ இதனை கண்டுபிடிக்க முடியவில்லை. பாதுகாப்பு விதிமீறல்கள் நடந்துள்ளது. ஸ்கேனிங் செய்யவே ஆட்கள் வெளியில் இருந்து வரவழைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் மொத்த தகவலையும் எடுக்க நீங்கள் அனுமதித்துள்ளீர்கள். மக்களின் தகவல்களை பாதுகாக்க வேண்டியது உங்களின் பொறுப்பு. அந்த தகவல்கள் தங்களிடம் மட்டும் தான் உள்ளது என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தேர்வு வாரியம் பொய் சொன்னதா என கேட்டார். அதற்கு ஜெய்தீப் குப்தா பதிலளிக்கையில், இருக்கலாம் என்றார்.இதனையடுத்து தலைமை நீதிபதி கூறுகையில், இது ஒரு மோசடி.அரசுப் பணிகள் இன்று அரிதானவை. அதனை சமூக பொறுப்புடன் பார்க்கப்படுகின்றன. இந்த நியமனங்களில் மோசடி நடந்தால், மக்கள் நம்பிக்கை இழப்பர்.அதனை எப்படி எதிர்கொள்வீர்கள்? என கேள்வி எழுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

jayvee
மே 08, 2024 07:17

மத்தியில் ஆளும் பிஜேபி அரசின்மீது காட்டும் கோபத்தில் சிறிதளவேனும் மம்தா போன்ற அராஜக ஆட்சியாளர்கள் மீது காட்டினால் நன்றாக இருக்கும் இப்படி மயிலிறகால் வருடியது போல கேட்பது மம்தாவுக்கு ஆனந்தமாக இருக்குமே தவிர திருந்தமாட்டார்


Dharmavaan
மே 07, 2024 21:15

உச்சநீதி அச்சோந்தித்தனம் தமிழ் நாட்டுக்கு ஒரு நீதி மற்றவர்க்கு வேறுகேட்பாரில்லை கேவலம்


Ramesh Sargam
மே 07, 2024 20:28

மக்களை மிரட்டுவோம்? நான் கூறவில்லை மேற்கு வங்க அரசு சார்பாக வாதிடும் வழக்கறிஞர் அப்படி கூறுவார்


sankaranarayanan
மே 07, 2024 20:12

இந்த மோசடி இனி பாரதத்தில் எந்த மானிலத்திலும் நடக்காதபடி இருக்க வேண்டுமானால் மேற்கு வங்க மமதை அரசை உடனே கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தினால்தான் மக்களுக்கு விடிமோட்சம் கிடைக்கும்


M Ramachandran
மே 07, 2024 19:12

மக்களை மக்களாக நினைக்கிறோம். எல்லா உரிமையும் அரசியல்வாதிகளுக்கே எங்கள் கொள்கையென கெஜ்ரிவால் மூலம் வெளிப்படுத்தி உள்ளோம் கொள்ளை அடிக்க தான் பணம் செலவழித்து பதவியை பிடித்துள்ளோம் அதை சம்பாரிக்க எங்களுக்கு முழு உரிமையும் உண்டு.இதை நீதி மன்றம் கேட்க கூடாது, உரிமையும் கிடையாது. சட்டம் எஙகள் கையிலே. பக்கத்துக்கு தேசத்து ஆட்களை வர வழைத்து வேண்டிய அளவில் கள்ள வோட்டு போடுவோம் ஜெயித்து பதவியில் அமருவோம்.


spr
மே 07, 2024 17:32

" அரசுப் பணி நியமனங்களில் முறைகேடு நடந்தால், மக்கள் நம்பிக்கை இழப்பர் அதனை எப்படி எதிர்கொள்வீர்கள்‛ " இங்கு இவர் கேட்ட கேள்விகள் அனைத்தும் தமிழக அரசிடம் கேட்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால், இது போன்ற கேள்விகள் எதனையுமே நம் தமிழக அரசிடம் இவர் கேட்டதில்லையே இதில் கூடத் தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யப்படுகிறது


அப்புசாமி
மே 07, 2024 17:31

அரசியல்வாதிகள் மீதும், நீதிமன்றங்கள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து ரொம்ப நாளாச்சு எசமான். ஏதோ தர்மத்துக்கு ஓடிட்டிருக்கு.


ஆரூர் ரங்
மே 07, 2024 16:46

கடைசியாக பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறீர்களா இல்லையா பாணியில் தீர்ப்பு வரலாம்.


sankar
மே 07, 2024 16:33

மோசடி பேர்வழி மம்தா


Srinivasan Krishnamoorthi
மே 07, 2024 16:28

தலைமை நீதிபதி யூகங்கள் ஏற்படும்படி நிறைய கேள்விகளை வைக்கிறார் நீதி துறையில் சட்டம் சாட்சி இரண்டும் மட்டுமே நிற்கும் அதை வாதங்கள் முன்னிறுத்தும் யூகம் தோன்றும் கேள்விகள் இன்றி தீர்ப்புகள் வழங்க பட்டாலே போதும் மக்கள் எதிர்பார்ப்பார்பது இது மட்டுமே


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை