உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காட்டு யானை தாக்கி விவசாயி பரிதாப பலி

காட்டு யானை தாக்கி விவசாயி பரிதாப பலி

ராம்நகர்; வயலில் காட்டு யானை தாக்கியதில், விவசாயி பலியானார்.ராம்நகர், கனகபுராவின், சாத்தனுாரு பேரூராட்சியின், கேரள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி புட்டநஞ்சய்யா, 65. கிராமத்தின் அருகில் உள்ள நிலத்தில், கேழ்வரகு உலர்த்தப்பட்டிருந்தது. இதை காவல் காப்பதற்காக, நேற்று முன் தினம் இரவு இவர் உட்பட, நால்வர் சென்றிருந்தனர்.மூவர் ஒரே இடத்தில், அருகருகே படுத்து உறங்கினர். புட்ட நஞ்சய்யா, தனியாக படுத்திருந்தார். நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து, நிலத்துக்கு வந்த ஒற்றை காட்டு யானை, புட்ட நஞ்சய்யா தலை மீது கால் வைத்து மிதித்துக் கொன்றது.யானையின் சத்தத்தைக் கேட்டு, விழித்தெழுந்த மற்ற மூவர், புட்ட நஞ்சய்யாவை காப்பாற்ற முயற்சித்தும் முடியவில்லை.கடந்த மாதம் அச்சலு கிராமத்தின் பட்டுத் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சியபோது, ஒற்றை யானையின் தாக்குதலுக்கு விவசாயி ஒருவர் உயிரிழந்தார். கனகபுராவின், பல்வேறு கிராமங்களில், காட்டு யானைகள் தொந்தரவு பல ஆண்டுகளாக உள்ள பிரச்னையாகும். நிலம், தோட்டங்களில் நுழைந்து பயிர்களை பாழாக்குகின்றன.'துணை முதல்வரின் சொந்த தொகுதியில், காட்டு யானைகளின் தொந்தரவு அதிகரித்தும், இதற்கு நிரந்தர தீர்வு காண, வனத்துறையோ, அரசோ நடவடிக்கை எடுக்கவில்லை' என, விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.எந்த நேரத்தில் காட்டு யானை தாக்குமோ என்ற பீதியில், கிராமத்தினர் வசிக்கின்றனர். யானை பயத்தால், கூலியாட்களும் பணிக்கு வருவதில்லை. சம்பவம் நடந்த இடத்தை, போலீசாரும், வனத்துறையினரும் நேற்று பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை