உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியவருக்கு சரமாரி அடி: நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியவருக்கு சரமாரி அடி: நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெலகாவி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஐ.பி.எஸ்., அதிகாரி அலோக் குமாரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்த ஜெயேஷ் பூஜாரி, மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியதால், அங்கிருந்தோர், அவரை சரமாரியாக தாக்கினர்.இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மங்களூரு இரட்டை கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஜெயேஷ் பூஜாரி, பெலகாவி ஹிண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்தாண்டு ஜனவரி 14, மார்ச் 21ம் தேதிகளில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு, சிறையில் இருந்தபடி, தனக்கு 10 கோடி ரூபாய் தர வேண்டும். இல்லையெனில் வெடிகுண்டு வீசி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்திருந்தார்.வழக்கு பதிவு செய்த மஹாராஷ்டிரா போலீசார், ஹிண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயேஷ் பூஜாரியை, மஹாராஷ்டிராவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை வழக்கில் கைதாகி உள்ள இவர், பயங்கரவாதி அப்சர் பாஷாவுடன் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்தது.இதேபோன்று, கடந்த 2018 ஏப்., 21ல், அப்போது வடக்கு மண்டல ஐ.ஜி.பி.,யாக இருந்தவரும், தற்போது மாநில போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஏ.டி.ஜி.பி.,யாக உள்ள அலோக் குமாருக்கும் கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.வழக்கு பதிவு செய்த போலீசார், வழக்கு விசாரணைக்காக இன்று மாவட்ட நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். இவ்வழக்கில் அவரின் மனு ஏற்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த அவர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார். அங்கிருந்த பொது மக்கள், வழக்கறிஞர்கள், அவரை சரமாரியாக தாக்கினர். அங்கிருந்த போலீசார், அவரை மீட்டு, ஏ.பி.எம்.சி., போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

RAMAKRISHNAN NATESAN
ஜூன் 13, 2024 00:44

திராவிட மாடல் வாடை அடிக்குதே?


RAJ
ஜூன் 12, 2024 23:49

இவனால் என்ன பிரயோஜனம்.. ஒன்னு.. முடிங்க.. இல்ல.. இந்தியாவைவிட்டு அகற்றுங்க.. தாய்திருநாட்டிற்கு எதிராக சிந்திக்கிற யாரும் இங்க கஷ்டப்பட்டு இருக்க தேவையில்லை. ...


இராம தாசன்
ஜூன் 12, 2024 23:46

இந்த மாதிரி ஆட்களை இரவோடு இரவாக பாகிஸ்தானில் கொண்டு போய் விட்டுவிடுங்கள் - அப்போது தெரியும் இந்தியாவின் அருமை


Makeesh
ஜூன் 12, 2024 23:04

தேசப்பற்றா மதப்பற்றா என்ற கேள்விக்கு எப்பொழுதுமே பதில் தேசப்பற்று என்று இருக்க வேண்டும் அப்பொழுதுதான் பல மொழிகள் பல மதங்கள் இருக்கும் நாடு ஒரே நாடாக இருக்க முடியும். மதப் பற்று அதிகமாகும் போது மற்ற மதங்களைப் பற்றி வெறுப்பு அதிகமாகும் போது மற்ற மதங்களை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இந்தத் தோற்கடிக்கும் முயற்சிக்கு தான் பல குழந்தைகள் பெறுவது, மதமாற்றம் செய்வது மற்றும் வெளிநாட்டில் இருந்து சட்டப் புறம்பாக நாட்டுக்குள் வருவோரை ஆதரித்து சேர்த்துக் கொள்வது நடக்கிறது. நாட்டுப்பற்றுள்ள கட்சி தொடர்ந்து ஆட்சி செய்யும் போது இதை குறைக்க வாய்ப்பு இருக்கிறது. இன்றைக்கு திமுக ஓட்டுக்காக சிறுபான்மையினர் சிறுபான்மையினர் என ஆதரித்தாலும் அவர்கள் கேட்பதெல்லாம் செய்து கொடுத்தாலும் திமுக தலைமை குடும்பம் என்னவோ அவர்களுக்கு காபிர் தான்.


konanki
ஜூன் 12, 2024 22:57

இந்த பகுத்தறிவாளர் தமிழகத்திற்கு வந்தால் திமுக காங்கிரஸ் விசிக கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2026 தேர்தலில் எம் எல் ஏ வாக போட்டியிட்டு வெற்றி பெற 100 சதவீதம் உறுதி


rao
ஜூன் 13, 2024 10:08

DK party will present him one sovereign gold ring .


Suresh sridharan
ஜூன் 12, 2024 22:08

நல்ல தொடக்கம் இனி யாரும் வாயை திறந்து வேண்டாத சிலருக்கு வேண்டி வாயை திறக்க மாட்டார்கள் ஏனென்றால் கிடைக்க வேண்டியது உடனே கிடைக்கிறது


Duruvesan
ஜூன் 12, 2024 21:51

நீ எங்க ஊர்ல செய்தால் உனக்கு பாதுகாப்பு குடுப்பாங்க


பேசும் தமிழன்
ஜூன் 13, 2024 12:52

அதோடு ....விருதும் கொடுப்பார்கள்..


Pandi Muni
ஜூன் 12, 2024 21:27

இவன மாதிரி வலிய வாய விட்டு சிக்கினவனுக்கெல்லாம் காயடிச்சி விட்டா மூர்க்க மக்கள் தொகையை பெருமளவு கட்டுப்படுத்தலாம்


S. Narayanan
ஜூன் 12, 2024 20:50

இந்த மாதிரி ஆட்களுக்கு உடனடியாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்


Ramesh Sargam
ஜூன் 12, 2024 20:42

அவன் கதையை அங்கேயே முடித்திருக்கவேண்டும். தவறு செய்து விட்டார்கள்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை