உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆட்சிக்கு வருவதற்கு முன் இனிக்கும் வாக்குறுதி; பின் விலைவாசி உயர்வு: பா.ஜ., சாடல்

ஆட்சிக்கு வருவதற்கு முன் இனிக்கும் வாக்குறுதி; பின் விலைவாசி உயர்வு: பா.ஜ., சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இண்டியா கூட்டணியினர் ஆட்சிக்கு வருவதற்கு முன் மக்களுக்கு இனிக்கும் வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த பின்னர் விலைவாசியை உயர்த்தி சாமானிய மக்களின் முதுகெலும்பை உடைத்து வருகின்றன' என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவலா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில், வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:கர்நாடகாவைத் தொடர்ந்து தற்போது தமிழகமும் கொள்ளையடிக்கும் மாடலை வெளிப்படுத்தி உள்ளது. இண்டியா கூட்டணியினர் ஆட்சிக்கு வருவதற்கு முன் மக்களுக்கு இனிக்கும் வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள்.

முதுகெலும்பு 'டமால்'

ஆட்சிக்கு வந்த பின்னர் விலைவாசியை உயர்த்தி சாமானிய மக்களின் முதுகெலும்பை உடைத்து வருகின்றன. தமிழகத்திலும் அரசு ஊழல் மிகுந்ததாக உள்ளது. சொந்த நலனுக்காகவே ஆட்சி நடக்கிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது. அரசியல் கொலைகள் அதிகம் நடக்கின்றன. தமிழகத்தில் தற்போது மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு 3வது முறையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

உண்மையான முகம்

ஏற்கனவே திமுக அரசு சொத்து வரியையும் குடிநீர் வரியையும் உயர்த்தி உள்ளது. கர்நாடகாவிலும் காங்கிரஸ் அரசு, மாநிலத்தை திவாலாக்கி இருக்கிறது. கர்நாடகாவில் பெட்ரோல், டீசல், பால், குடிநீர் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.இண்டியா கூட்டணியின் உண்மையான முகம் இது தான். இவ்வாறு ஷேசாத் பூனவலா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Saleem
ஜூலை 22, 2024 00:08

வாயில் வடை சுடுவது பாஜக வின் கொள்கை இவர்கள் மற்றவர்களை குறை கூறுகிறார்கள்


ramesh pm
ஜூலை 18, 2024 17:41

மின் கட்டணம் உயர்வு கிடையாது. மின் கட்டணம் திருத்தம்.


அப்பாவி
ஜூலை 17, 2024 19:27

பாஞ்சி லட்சம், ரெண்டு கோடி வேலை, அல்லாருக்கும் வூடுன்னு வாக்குறுதிகள் குடுத்து காங்கிரஸ் ஆட்சியை புடிச்சுது. இப்போ என்ன செய்யறதுன்னு தெரியலை.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 17, 2024 14:52

மத்தியில் நீங்களும் அப்படித்தானே பாஸ் ????


Senthoora
ஜூலை 17, 2024 14:36

பாஜாக ஆட்ச்சிக்கு வந்தபின் பெட்ரோல், வரிகள் எவ்வளவு உயர்ந்துள்ளது என்று சொல்லிட்டு சொல்லணும்.


S. Narayanan
ஜூலை 17, 2024 13:58

ஜனாதிபதி ஆட்சி ஓகே


மேலும் செய்திகள்







புதிய வீடியோ