உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆதார் - பான் தாமதம் ரூ.600 கோடி அபராதம் வசூல்

ஆதார் - பான் தாமதம் ரூ.600 கோடி அபராதம் வசூல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆதாருடன், பான் எண்ணை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குபின் இணைத்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் வாயிலாக, 600 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.'வருமான வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கில் ஆதாருடன், பான் எனப்படும், நிரந்தர வருமான வரிக்கணக்கு எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது.இந்நிலையில், இறுதி வாய்ப்பாக, 2023 ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த தேதிக்குள் ஆதார் -- பான் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு மேல் அவகாசம் அளிக்கப்படாது எனவும் அவ்வாறு, இணைக்காதவர்களின் பான் எண், செயலற்றதாகிவிடும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. எனினும், அதன்பின், 1,000 ரூபாய் அபராதமாக செலுத்தி, மீண்டும் அவற்றை பயன்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தியிருந்தது.இதுதொடர்பாக, லோக்சபாவில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியிருந்ததாவது:கடந்த ஜன., 29ம் தேதி நிலவரப்படி, ஆதாருடன் - பான் எண்ணை இதுவரை, 11.48 கோடி பேர் இணைக்கவில்லை. இவற்றை, 1,000 ரூபாய் அபராத தொகையுடன் தாமதமாக பலர் இணைத்து வருகின்றனர். கடந்த ஜன., 31ம் தேதி நிலவரப்படி, இதன் வாயிலாக 601.97 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Chennaivaasi
பிப் 06, 2024 13:08

மத்திய, மாநில ஊராட்சி அரசாங்கங்கள் மக்களை பணம் காய்க்கும் எந்திரமாக மட்டுமே பயன்படுத்துகின்றன. உருப்படியான சாலை, பள்ளி, மருத்துவ வசதிகள் எதுவும் சாதாரண மக்களுக்கு கிடைப்பது இல்லை. அரசியல் வாதிகளும் அரசு அதிகாரிகளும் அனைத்து பயனையும் அடைகிறார்கள். சாதாரண மக்கள் நேர்முக மற்றும் மறைமுக வரி செலுத்தி பயன் ஏதும் பெறாமல் இருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்துவதற்கு சொல்லப்பட்ட காரணம் உலக தரமான உட்கட்டமமைப்பு . ஏதாவது ஒரு சாலையாவது உருப்படியாக இருக்கிறதா? புதிதாக போடப்படும் சாலை கூட மிக மோசமான தரத்தில் தான் உள்ளது.


J.Isaac
பிப் 06, 2024 12:10

இதுவும் அரசின் பெரிய சாதனைதான்


Ramesh Sargam
பிப் 06, 2024 07:43

நான் என் பான் அட்டையில் என் மொபைல் போன் நம்பரை சேர்க்கச்சொல்லி, நான்கு வருடங்களுக்கு முன்னர் விண்ணப்பம் கொடுத்தேன். இன்றுவரை புதிய அட்டை வந்துசேரவில்லை. இதற்கு யாருக்கு அபராதம் விதிப்பீர்கள்?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை