உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பேக்கரி இடித்து தரைமட்டம்: காரணம் தெரிஞ்சா நீங்களும் கொந்தளிப்பீங்க!

பேக்கரி இடித்து தரைமட்டம்: காரணம் தெரிஞ்சா நீங்களும் கொந்தளிப்பீங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: அயோத்தியில் 12 வயது சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவரின் பேக்கரியை அரசு இடித்து தரைமட்டமாக்கியது. உ.பி., மாநிலம் அயோத்தியை சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மொய்கான், ராஜூகான் ஆகிய இருவர் மீது சிறுமியின் தாய் ஜூலை 30ம் தேதி புரலாந்தர் போலீசில் புகார் அளித்தார். இச்சம்பவம் முதல்வர் யோகி ஆதித்யநாத் கவனத்திற்கு சென்றது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் முதல்வரை சந்தித்த நிலையில், அதிகாரிகள் இருவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். முக்கிய குற்றவாளியான, மொய்த் கானின் பேக்கரியை அயோத்தி மாவட்ட நிர்வாகம் புல்டோசர் மூலம் இடித்தது. மொய்த் கான் சமாஜ்வாதி கட்சி நிர்வாகி என முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டசபையில் பேசுகையில் தெரிவித்தார்.

தண்டனை

சமூகவலைதளத்தில், சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: தவறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு டிஎன்ஏ சோதனை நடத்தி, அதில் அரசியல் செய்யாமல், நீதி கிடைக்க பா.ஜ., அரசு வழிவகை செய்ய வேண்டும். குற்றவாளிக்கு முழு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

நிதியுதவி

ஆனால் டிஎன்ஏ சோதனைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளையும் விட்டுவிடக்கூடாது. வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதற்குப் பதிலாக, சமாஜ்வாடி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சதியில் அரசு ஈடுபட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு உடனடியாக ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

venugopal s
ஆக 03, 2024 23:11

குற்றம் நிரூபிக்கப்படாமல் சந்தேகத்தின் பேரில் மட்டுமே எடுக்கும் நடவடிக்கைகள் பெரும்பாலும் தவறாகவே இருக்கும்!


rama adhavan
ஆக 04, 2024 01:30

அப்போ சவுக்கு சங்கர், மாரிதாஸ், கிஷோர் கே சாமி, அரசியல் கைதுக்கள் அனைத்தும் தவறுதானே?


cbonf
ஆக 03, 2024 22:52

* மோடியும் நமது நீதிமன்றங்களும் யோகிஜியிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் * குற்றவாளிகள் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டும் * நேஷனல் ஹெரால்டு குற்றவாளிகளை ஆவண ஆதாரங்களுடன் சாமி அம்பலப்படுத்திய 13 ஆண்டுகளுக்குப் பிறகும் - தாய்-மகன் கிரிமினல் இரட்டையர்கள் இன்னும் சுதந்திரமாகத் திரிகின்றனர். * அகஸ்டா ஊழல் வழக்கில் லஞ்சம் கொடுத்தவர்களுக்கு இத்தாலியும் தண்டனை விதித்துள்ளது. ஆனால் 300 கோடி லஞ்சம் பெற்ற தாய் மகன் இருவரையும் இந்திய நீதிமன்றங்கள் தண்டிக்கத் தவறிவிட்டன


Sivasankaran Kannan
ஆக 03, 2024 22:08

இந்த திராவிட கும்பல் கொள்ளை கூட்டங்களை இடித்து தள்ளினா, மொத்த சொத்தையும் பிடுங்கினால், இந்திய மொத்தமும் பணக்கார நாடக ஆயிரும்.. கஞ்சா முதல், போதை, மணல் கொள்ளை, கனிம கொள்ளை, சினிமா கொள்ளை, டாஸ்மாக் கொள்ளை என்று லிஸ்ட் ரொம்ப பெருசு..


RAMAKRISHNAN NATESAN
ஆக 03, 2024 21:48

சிலப்பம் நாங்களும் ஒரேகல்லு பேரு போடமாட்டோமாக்கும் ...


RAMAKRISHNAN NATESAN
ஆக 03, 2024 21:47

மூர்க்கம்கூட சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டுதான் தண்டனை தருகிறது


rama adhavan
ஆக 03, 2024 21:31

அரசு 1 கோடியே தரட்டும், குற்றவாளி மற்றும் சமாஜ்வாதி கட்சியிடம் வசூல் செய்து. அதென்ன டி என் ஏ சோதனை? குற்றம் நடந்து காலம் கடந்து பரிசோதனை செய்தால் ஒன்றும் தெரியாது என இவருக்கு தெரியாதா?


RAJ
ஆக 03, 2024 21:19

அது.. முதல் அமைச்சர்..


Ramesh Sargam
ஆக 03, 2024 21:05

JCB யை சரியாக உபயோகிக்கும் யோகிஜி அவர்களுக்கு பாராட்டுக்கள்.


Barakat Ali
ஆக 03, 2024 20:56

பெரும்பான்மையினர் உள்ளத்தில் அச்ச / சந்தேக உணர்வை சிறுபான்மையினர் ஏற்படுத்தினாலும் ஆபத்துதான் .....


Jysenn
ஆக 03, 2024 20:15

Yogi should be made the PM. He is bold and brave unlike the incumbent whose government is spineless and has become useless.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ