உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அமித்ஷா ஆய்வு கூட்டம்: முதல்வர் புறக்கணிப்பு ?

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அமித்ஷா ஆய்வு கூட்டம்: முதல்வர் புறக்கணிப்பு ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லியில் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில் மணிப்பூர் பா.ஜ., முதல்வர் பைரன்சிங் பங்கேற்காமல் புறக்கணித்தார்.மணிப்பூரில் கடந்தாண்டு கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே பெரும் கலவரம் ஏற்பட்டது. ஏராளமானோர் பலியாகினர். இதை தொடர்ந்து பழங்குடியின இளம் பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ நாட்டை அதிரவைத்தது. இந்த பிரச்னை தணிந்திருந்தாலும், கடந்த சில தினங்களுக்கு முன் கச்சார் மாவட்டத்தில் ஜிரிபாம் என்ற இடத்தில் வன்முறை ஏற்பட்டது. ஒருவர் பலியானார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8s04ru4r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 10-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகையில், ஒராண்டாக பற்றி எரியும் மணிப்பூர் விவகாரத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். அங்கு வன்முறையை தடுத்து நிறுத்தி நிரந்தர அமைதி நிலவ வேண்டும். இது தொடர்பாக முன்னுரிமையின் கீழ் விவாதிக்கப்பட வேண்டும் என்றார்.இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டில்லி உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாநில கவர்னர் அனுசுயா உக்கி, டி.ஜி.,பி., ராஜிவ்சிங், தலைமை செயலாளர் வினீத் ஜோஷி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பாதுகாப்பு நிலவரம், மக்களின் சகஜநிலை, என மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்து விவாதித்தார்.இந்நிலையில் இந்த கூட்டத்தில் பா.ஜ., முதல்வர் பைரோன்சிங் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தை புறக்கணித்தாரா, அல்லது வேறு காரணமா என தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

K.n. Dhasarathan
ஜூன் 18, 2024 11:25

அமித் ஷா வினால் பிரச்சினையை தீர்க்க முடியலை, பிரதமர் போயி எட்டி பார்க்க முடியலை, மக்கள் அமைதியாக வாழ முடியலை ஆனால் பேச்சு மட்டும் " மணிப்பூர் அமைதி பூன்க் க்காவாக உள்ளது, காஸ்மீர் ஆன்மிக நாடாகிவிட்டது " பொய்யர்களிடம் ஆட்சியை கொடுத்தால் இப்படித்தான்.


Easwar Kamal
ஜூன் 17, 2024 21:33

சீனா மற்றும் கம்யூனிஸ்ட் தலையிட்டு உள்ளது அதனால் எப்படி ஒரு மாநிலத்தை புறக்கணிக்க முடியும். அவரு உண்மையாக இருந்தால் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க பட வேண்டும். அவ்வாறு புறக்கணிக்கத்ததால்தான் RSS தலைவர் வரைக்கும் கேள்வி கேக்குறார்கள். வெட்க KEDDU


Ramesh Sargam
ஜூன் 17, 2024 20:50

ஆய்வு, கூட்டம், கருத்து தெரிவிப்பது இதெல்லாம் வேண்டாம். அமித்ஷா அவர்களே மணிப்பூரில் சிலநாட்கள் தங்கி இருந்து, அதாவது ராணுவ அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் அவர்களுடன் தங்கி, இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமுடிவு காண்பது சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.


Rpalnivelu
ஜூன் 17, 2024 20:30

சீன மற்றும் கான்க்ரஸ் கூட்டணி சேர்ந்து அங்கு கலவரத்தை தணிய விடாமல் பார்த்துக் கொள்கின்றனர். தேவை ஒரு சாணக்ய ஸ்ட்ராட்டஜிஸ்ட்.


ஆரூர் ரங்
ஜூன் 17, 2024 19:04

பல ஆண்டுகளாக அங்கு வன்முறை நடக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து நூற்றைம்பது நாட்களுக்கு மேலாக பந்த் நடந்தது. இப்போது அரசியல்வாதிகள் புகுந்து குழப்புகிறார்கள்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை