உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எம்.எல்.சி., பதவி ரோசய்யா ராஜினாமா

எம்.எல்.சி., பதவி ரோசய்யா ராஜினாமா

ஐதராபாத்:ஆந்திர முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான ரோசய்யா, தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர், தனது ஆந்திர சட்ட மேலவை உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். சட்ட மேலவை தலைவர் சக்ரபாணியை நேற்று சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து, ரோசய்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எனது அரசியல் வாழ்க்கையை, சட்ட மேலவை உறுப்பினராக துவங்கினேன். எதிர்பாராதவிதமாக, சட்ட மேலவை உறுப்பினராகவே எனது அரசியல் வாழ்க்கையை நிறைவு செய்கிறேன்' என்றார். கடந்த 2009ம் ஆண்டு செப்., 3ல் முதல், 2010 நவ., 24 வரை ரோசய்யா ஆந்திர முதல்வராக பதவி வகித்தார். இன்று தமிழக கவர்னராக பொறுப்பேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை