உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலி பத்திரங்களை தடுக்க பூ சுரக் ஷா திட்டம் ஞாயிறில் கூடுதல் சார் - பதிவாளர் ஆபீஸ் திறப்பு

போலி பத்திரங்களை தடுக்க பூ சுரக் ஷா திட்டம் ஞாயிறில் கூடுதல் சார் - பதிவாளர் ஆபீஸ் திறப்பு

வருவாய்

l போலி பத்திரங்கள் தயாரிப்பதை தடுக்க, வருவாய் துறையில் சோதனை முறையில் 'பூ சுரக் ஷா' திட்டம் கொண்டு வரப்படும். இதனால் நில ஆய்வு, ஸ்கேனிங், பதிவுகள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும்l மாநிலத்தில் இதுவரை சுமார் 30,700 கிராமங்களில், ட்ரோன் மூலம் ஆய்வு நடத்தி, நில உரிமையாளர்களுக்கு சொத்து மற்றும் உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது மாநிலம் முழுதும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.l நவீன தொழில்நுட்பம் மூலம், பொது மக்களுக்கு குறைந்த நேரத்தில் நிலங்கள் ஆய்வு நடத்தி, டிஜிட்டல் ஆவணங்கள் வழங்க, அனைத்து மாநிலங்களுக்கும் ட்ரோன் உட்பட கருவிகள் வழங்கப்படும்.

l 'டிஜி' - வருவாய் திட்டத்தின் கீழ், ஆவணங்களை டிஜிட்டல் முறையில் வழங்க, மாநிலத்தின் கிராம அளவிலான அலுவலக நிர்வாக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்

l நில ஆய்வு துறையின் 240 பதிவு அறைகளை நவீனமயமாக்கி, ஆன்லைன் மூலம் வருவாய் பதிவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்l அரசு நில ஆக்கிரமிப்பை தடுக்க, ஆர்.டி.சி., என்ற உரிமை, குத்தகை, பயிர்களின் ஆவணங்களை, 'லாண்ட் பீட்' செயலி மூலம் கண்காணிக்கப்படும்.l நடப்பாண்டு 42 தாலுகா அலுவலக காம்ப்ளக்ஸ்கள் கட்ட 80 கோடி ரூபாயும்; 14 மாவட்ட அலுவலக காம்ப்ளக்ஸ்கள் கட்ட 50 கோடி ரூபாயும் ஒதுக்கீடுl கடந்த 2023 - 24ல் மாநிலத்தில் 223 தாலுகாக்கள் வறட்சி தாலுகாக்களாக அறிவிக்கப்பட்டன. இது தொடர்பாக 18,171 கோடி ரூபாய் நிவாரணம் ஒதுக்கும்படி, மத்திய அரசிடம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு ஏற்கவில்லை. இதை சமாளிக்க மாநில அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளது

நிலத்தடி நீர் மட்டம்

l மாநிலத்தின் 33.19 லட்சம் விவசாயிகளுக்கு தலா 2,000 ரூபாய் வீதம், 629 கோடி ரூபாய் ஒதுக்கீடுl சிறு தீவனப் பெட்டிகள் வழங்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு

l 'விவசாய பாக்யா' திட்டத்தின் கீழ், நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

l சிறிய நீர்ப்பாசன துறை சார்பில் குடிநீர் பாதுகாப்பு பணிக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடுl நடப்பாண்டு வறட்சி பாதிப்பு சீரமைப்பு பணிகளுக்காக, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடுl மாணவர்கள் இடையே பருவநிலை மாற்றம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'பருவநிலை மாற்ற அனுபவ மையம்' அமைக்க, 10 கோடி ரூபாய் ஒதுக்கீடுl பதிவு துறையில் 'எந்த நேரத்திலும் - எங்கும் பதிவு' முறை, மாநிலம் முழுதும் நீட்டிக்கப்படும்l பொது மக்கள் வசதிக்காக ஞாயிற்று கிழமைகளில் கூடுதல் துணை சார் - பதிவாளர் அலுவலகம் திறக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை