உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணை முதல்வர் முன்னிலையில் போலீசுக்கு ‛பளார் விட்ட பா.ஜ., எம்.எல்.ஏ,,

துணை முதல்வர் முன்னிலையில் போலீசுக்கு ‛பளார் விட்ட பா.ஜ., எம்.எல்.ஏ,,

புனே: மஹாராஷ்டிராவில் துணை முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தனக்கு அவமதிப்பு ஏற்பட்ட ஆத்திரத்தில் சீருடை அணியாத போலீஸ் கான்டஸ்பிள் கன்னத்தில் பா.ஜ., எம்.எல்.ஏ, அறைந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூட்டணி அரசில் தேசிய வாத காங், கட்சியின் அஜித்பவார் துணை முதல்வராக உள்ளார். புனேயில் அரசு விழா ஒன்றில் அஜித் பவார் பங்கேற்றார். தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் பா.ஜ., எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளே என்பவரும் கலந்து கொண்டார்.அப்போது விழா மேடையில் தொகுதி எம்.எல்.ஏ., என்ற முறையில் தன்னை பேச அழைக்கவில்லை மேலும் விழா அழைப்பிதழில் தன் பெயரும் இடம் பெறவில்லை என தெரிய வந்தது. இதனால் கடுப்பாகி போன சுனில் காம்ப்ளே விழாவை புறக்கணித்து பாதியிலேயே வெளியேறினார்.கடுங்கோபத்துடன் விழா மேடை படிக்கட்டிலிருந்து கீழே இறங்கும் போது பின்னால் வந்தவர்கள் உரசியதால் தடுமாறினார். அப்போது அருகில் பாதுகாப்பு நின்றிருந்த சீருடை அணியாத போலீஸ் கான்ஸ்டபிள் கன்னத்தில் இடது கையால் ஓங்கி அறைந்தார். இதன் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ramesh
ஜன 06, 2024 18:08

எம்எல்எ அந்த பாது காவலரை தாக்கவில்லை .பாது காவலர் தான் தன கன்னத்தினால் எம்எல்எ வின் கையில் பலமாக தாக்கி விட்டார் என்று சொல்லி பிஜேபி இனர் போராட்டம் நடத்துவார்கள்


ஆரூர் ரங்
ஜன 06, 2024 15:51

சக கழக ஆளை கல்லால் தாக்கிய அமைச்சர் நாசரை கழகத்தை விட்டா விலக்கிவிட்டார்கள்?????


duruvasar
ஜன 06, 2024 11:07

எவனாக இருந்தாலும் இது கண்டிக்கத்தக்கது இதை வளரவிடக்கூடாது. நம்ம ஊரில் அமைச்சர் ராமசந்திரன் , நேரு போன்றவர்கள் பொதுவெளியில் அடுத்தவரை அடிப்பது ஒரு ஃபேஷனாக ஆக போய்விட்டது. ஸ்டாலின் கூட மின்சார இரயிலில் நடந்த படப்பிடிப்பின்போது அவரிடம் கைகொடுக்க வந்த போது அவரை அறைந்தார் . அப்போது அவர் எம் எல் ஏ வாகத்தான் இருந்தார்.


Sampath Kumar
ஜன 06, 2024 08:59

திமிர் எல்லா அரசியில் வியாதிகளுக்கும் உண்டு என்பதை புரிந்து கொண்டாள்


raja
ஜன 06, 2024 08:39

திராவிட மாடல் மங்குனி செய்திருந்தால் அடி வாங்கியவர் மங்குனி எங்கள் சொந்த காரர் செல்லமாக தட்டினார் என்று பேட்டி கொடுத்திருக்க வைக்க பட்டு இருப்பார்....


Ramesh Sargam
ஜன 06, 2024 06:02

இதுபோன்ற தலைவர்களை பாஜக மேலிடம் உடனே எச்சரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இது போன்றவர்களால் ஒட்டுமொத்த கட்சிக்கே அவப்பெயர்.


chennai sivakumar
ஜன 06, 2024 05:50

Attempt to மர்டர் sectionalil case பதிவு செய்து விசாரணை நடத்தி, பதவியை பறித்து உள்ளே ஒரு 6 மாதம் வைத்தால் மற்ற ஆசாமிகளுக்கும் கொஞ்சம் பயம் இருக்கும்.


Vijay D Ratnam
ஜன 05, 2024 23:57

நீதிமன்றம் தலையிட்டு இது போன்ற பொறுக்கித்தனம் செய்யும் எம்.எல்.ஏ வின் பதவியை உடனடியாக பறிக்க வேண்டும்.


K.Ramakrishnan
ஜன 05, 2024 23:54

தமிழ்நாட்டுல நடந்தால்தான் அண்ணாமலை கேட்பாரு... மகாராஷ்டிராவில் மட்டுமல்ல... பா.ஜனதா ஆட்சி நடக்கிற எந்த ஒரு மாநிலத்தில் எந்த ஒரு அநியாயம் நடந்தாலும், பா.ஜனதா எம்.பி.க்கள்,எம்.எல்.ஏ.க்கள் என்ன செய்தாலும்... ஏன் தமிழ்நாட்டில் பா.ஜனதா பிரமுகர்கள் எந்த மோசடியில் ஈடுபட்டாலும், அதைப் பற்றி எல்லாம் அண்ணாமலை கேட்க மாட்டார்.. பார்க்க மாட்டார்... கண்டு கொள்ள மாட்டார்.. இன்னும் சொல்லப் போனால் கேளா காது, பேசா வாய், பார்க்காத கண்களுடன் தான் இருப்பார்...ஆனால் ஒன்று இந்த அநியாயக்காரர்கள் பா.ஜனதாவில் சேர்ந்தால் போதும்... மகாராஷ்டிரா அஜித் பவார் மாதிரி புனிதர் ஆகி விடலாம்.


ரவீ
ஜன 05, 2024 23:28

இதை ஒருபோதும் பிஜேபி அனுமதிக்காது. தண்டனை விரைவில் வழங்கப்படும்


Senthoora
ஜன 06, 2024 05:59

பிஜேபி உள்ளவர்கள் பெண்களை பலாத்காரம் செய்தவர்களுக்கே இன்னும் கைதும் இல்லை, நடவடிக்கை இல்லை, இதுதுக்கெலாம் எங்கே நடவடிக்கை, இன்னும் பாருங்க வைச்சு செய்வாங்க. சங்கிகள் என்றா சும்மாவா.


வாய்மையே வெல்லும்
ஜன 06, 2024 13:42

பொத்தாம் பொதுவா வேடிக்கை பார்ப்பது தான் திராவிட அடிவருடிகள் வேலை.. ..தப்பு எங்கு நடந்தாலும் அது எந்த கட்சியாக இருந்தாலும் நாங்க தட்டிக்கேட்போம் தவறு பாஜாக செய்தாலும் கேட்போம்..


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி