உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சரணடைய வந்த எம்.பி.யை மடக்கி பிடித்தது போலீஸ்

சரணடைய வந்த எம்.பி.யை மடக்கி பிடித்தது போலீஸ்

தர்பங்கா: பீகாரில் மின்வாரிய அலுவலகத்தை சூறையாடிய வழக்கில் போலீசாரால் தேடப்பட்டுவந்த பா.ஜ. எம்.பி. கீர்த்தி ஜஹா ஆசாத் நேற்று கோர்டில் சரணடைய வருவதற்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பீகாரில் கடந்த 2001-ம் ஆண்டு தர்பங்காவில் உள்ள மாநில் அரசு மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்த கீர்த்தி ஜஹா ஆசாத், அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடியதுடன், பொதுமேலாளரை தாக்கி காயப்படுத்தினார்.இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. எனினும் இவர் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஜூ‌ன் 24-ம் தேதி உள்ளூர் கோர்ட் இவருக்கு ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆசாத் நேற்று கோர்டில் சரணடைய வந்தார். அதற்குள் போலீசார் அவரை கைது செய்தனர். முன்னதாக இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை