உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் மார்க்சிஸ்ட் - காங்கிரசுக்கு பா.ஜ., முடிவு கட்டும்: பிரகாஷ் ஜாவடேகர்

கேரளாவில் மார்க்சிஸ்ட் - காங்கிரசுக்கு பா.ஜ., முடிவு கட்டும்: பிரகாஷ் ஜாவடேகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., - காங்., என்ற இரு கட்சிகளின் ஆதிக்கத்துக்கு, பா.ஜ., முடிவு கட்டும். வரும் லோக்சபா தேர்தலில், குறைந்தது ஐந்து தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும்,'' என, முன்னாள் மத்திய அமைச்சரும், அம்மாநில பா.ஜ., மேலிட பொறுப்பாளருமான பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆளும் மார்க்சிஸ்ட் - எதிர்க்கட்சியான காங்., என, இரு கட்சிகளை சுற்றியே அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. தேர்தல்களிலும், இரு கட்சிகளுக்கும் இடையே தான் இரு முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் நேற்று, முன்னாள் மத்திய அமைச்சரும், அம்மாநில பா.ஜ., மேலிட பொறுப்பாளருமான பிரகாஷ் ஜாவடேகர் பேட்டி ஒன்றில் கூறியதாவது:கடந்த 2019ல், கேரளாவில் உள்ள அனைத்து தரப்பினரும், ராகுல் பிரதமராவார் என கூறினர். ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை.கேரள மக்கள் அனைவரும் தற்போது பிரதமர் மோடியை நம்புகின்றனர். அவர் மீண்டும் வெற்றி பெறுவார் என்பதை உணர்ந்துள்ளனர். கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஏன் ஓட்டளித்தோம் என்பதை எண்ணி அம்மாநில மக்கள் தற்போது வருத்தப்படுகின்றனர். இந்த முறை பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க அவர்கள் தயாராகி விட்டனர். வரும் லோக்சபா தேர்தலில், குறைந்தது ஐந்து தொகுதிகளிலாவது பா.ஜ., வெற்றி பெறும். மார்க்சிஸ்ட் - காங்., என்ற இரு கட்சிகளின் இரு முனை அரசியலுக்கு முடிவு கட்டி, பா.ஜ., புதிய அத்தியாயத்தை துவங்கும். கிறிஸ்துவ மக்களின் நலனுக்காக, மத்தியில் ஆளும் பா.ஜ., பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இதனால், கேரளாவில் உள்ள கிறிஸ்துவர்களின் கணிசமான ஓட்டுகள், இம்முறை நிச்சயம் எங்களுக்கு கிடைக்கும். மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைக்கும்; மோடி மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த 2019 லோக்சபா தேர்தலில், கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில், 19ல், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

venugopal s
பிப் 05, 2024 16:32

பாஜக தலைவர்களுக்கு நிறையவே நகைச்சுவை உணர்வு உள்ளது! இப்படித்தான் போன மாதம் மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் தமிழகத்துக்கு வந்து பாஜக வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருபத்தைந்து இடங்களில் வெற்றி பெறும் என்று ஜோக் அடித்து விட்டுப் போனார், இப்போது இவரா?


beindian
பிப் 05, 2024 16:02

கேரளா மொத்தம் படிப்பறிவு உள்ளமாநிலம் என்பது பாவம்


beindian
பிப் 05, 2024 17:07

தெரியாது போலும்?


beindian
பிப் 05, 2024 17:10

தென்னிந்தியாவை பொறுத்தவரை இந்த பீஜேப்பீ வைத்து இருக்கும்


Indian
பிப் 05, 2024 14:15

ஆட்டுக்குட்டி சிங்கத்தை பார்த்து கர்ஜிக்குதாம்


RAMAKRISHNAN NATESAN
பிப் 05, 2024 16:06

சிங்கமா ? அசிங்கமா ?


Barakat Ali
பிப் 05, 2024 13:54

கேரளாவையும், டுமீலு நாட்டையும் சுளுக்கெடுக்கணும் ....


ஆரூர் ரங்
பிப் 05, 2024 11:59

அங்கு காங்கிரசும் கம்யூனிஸ்டும் மறைமுக ஒப்பந்தம் மூலம் மூன்றாவதாக யாரையும் முன்னேறவிடுவதில்லை. முயன்றால் பிஜெபி போல நூற்றுக்கணக்கான தலைவர்கள் மற்றும் ஊழியர்களை பலி கொடுக்க வேண்டியிருக்கும்????‍????. பெயருக்குத்தான் படித்த மாநிலம் . மற்றபடி வன்முறை அரசியலுக்குப் பெயர் பெற்றது.


பேசும் தமிழன்
பிப் 05, 2024 08:22

கான் கிராஸ் மற்றும் கம்யுனிஸ்ட் கட்சிகள்... இந்த நாட்டுக்கு தேவையில்லாத.... அவை இந்த நாட்டை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்.


பேசும் தமிழன்
பிப் 05, 2024 08:19

படித்த முட்டாள்கள் என்றால் அது கேரளா மக்கள் தான்.... கான் கிராஸ் மற்றும் கம்யுனிஸ்ட்... கூட்டணி என்றால்... எதற்க்கு கேரளாவில் தனி தனியே ஓட்டு போட வேண்டும்... பேசாமல் பிஜெபி க்கு ஓட்டு போட்டு விடலாமே ??? கம்யுனிஸ்ட் வேட்பாளர் வெற்றி பெற்றாலும் ஒரு பிரயோசணம் இல்லை... அவர்கள் அங்கே போய் கான் கிராஸ் கட்சிக்கு தான் ஓட்டு போட போகிறார்கள்... அதற்க்கு பேசாமல் கான் கிராஸ் கட்சிக்கு ஓட்டு போட்டு விடலாம் !!!


அப்புசாமி
பிப் 05, 2024 07:37

இவரோட அமைச்சர் பதவிக்கு முடிவு கட்டுன மாதிரி அவ்வளவு சுலபமல்ல.


sankar
பிப் 05, 2024 06:32

மேற்கு வங்கத்தை போல - இங்கே கேரளாவிலும் கம்யூனிஸ்ட் முகவரியை இழக்கும் என்பது மிகவும் தெளிவு


Muralidharan raghavan
பிப் 05, 2024 10:06

கேரளாவில் நாற்பத்தியெட்டு சதவீதம் பேர் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பாஜகவை வர விட மாட்டார்கள். மீதியுள்ள ஹிந்துக்கள் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக என்று பிரிந்து கிடக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள் அதிகம்.


Apposthalan samlin
பிப் 05, 2024 10:47

தமிழ் நாட்டில் இருபத்தி ஆறு சதவீதம் சிறு பான்மை மக்கள் தலித் மக்களும் சிறுபான்மை பக்கம் தான் அதனால் தான் எடப்பாடி சிறுபான்மை சிறுபான்மை என்று கதறுகிறார் சிறுபான்மை ஆதரவில் தான் தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்க முடியும்


Ramesh Sargam
பிப் 05, 2024 00:02

சீக்கிரம் கட்டுங்கள். மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் நெடும்காலமாக.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ