உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிமாச்சலில் ஒரே பெண்ணை மணந்த அண்ணன், தம்பி

ஹிமாச்சலில் ஒரே பெண்ணை மணந்த அண்ணன், தம்பி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் பாரம்பரிய முறையை பின்பற்றி, ஒரே பெண்ணை, இரு சகோதரர்கள் திருமணம் செய்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.ஒருவருக்கு ஒருத்தி என்ற கலாசாரம் நம் நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் சூழலில், ஹிமாச்சல பிரதேசத்தில் வசிக்கும் ஹட்டி பழங்குடியின சமூகத்தினர், வித்தியாசமான முறையை கடைப்பிடித்து வருகின்றனர். இங்கு, ஒரு பெண் இரண்டு ஆண்களை திருமணம் செய்யும் பழக்கம், ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இங்குள்ள சிர்மவுர் மாவட்டம் குன்ஹட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா சவுஹான் என்ற இளம்பெண், பிரதீப் நேகி மற்றும் கபில் நேகி என்ற இரு சகோதரர்களை கரம்பிடித்துள்ளார்.இரு வீட்டார் சம்மதத்துடன், குறிப்பாக மணப்பெண்ணின் சம்மதத்துடனும் இந்த திருமணம் நடந்துள்ளது.சகோதரர்களின் ஷில்லாய் கிராமத்தில், கடந்த 12 - 14ம் தேதி வரை மூன்று நாட்களாக தடபுடலாக நடந்த திருமணத்தில், ஹட்டி சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.மணமகனில் ஒருவரான பிரதீப் அரசு பணியில் இருக்கிறார். அவரது சகோதரர் கபில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.ஹட்டி இனத்தில் இதுபோல் ஒரே பெண்ணை இருவர் திருமணம் செய்யும் முறையை, ஜோடிதரன் அல்லது திரவுபதி பிரதா என பாரம்பரியமாக அழைக்கின்றனர். இந்த வழக்கம் சிர்மவுர் மாவட்டத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி, அண்டை மாநிலமான உத்தராகண்டிலும் காணப்படுகிறது. மலைப்பகுதிகளில் அதிகம் வாழும் ஹட்டி இன மக்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டது.மூதாதையரின் சொத்து பிரிந்து போகக் கூடாது என்பதற்காகவும், எந்தப் பெண்ணும் கணவனை இழந்தவர்கள் என்ற நிலைக்கு ஆளாவதை தடுக்கவும், இது போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்யும் நடைமுறை புழக்கத்தில் இருப்பதாக ஹட்டி சமூகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Padmasridharan
ஜூலை 22, 2025 08:10

ஒருவனுக்கு ஒருத்தி என்று பொது மக்களுக்கு சொல்லிவிட்டு ஒருவருக்கு தெரியாமல் இன்னொருத்தர் உறவில் கலந்திருப்பதைவிட இது எவ்வளவோ சாலச்சிறந்தது.. இதுபோல்தான் நாமிருவர் நமக்கொருவர்கிருவர் என்று மத்தவர்களுக்கு சொல்லி 2-3 மனைவிகளை வைத்து ஒவ்வொருவருக்கும் 2-3 குழந்தைகளை பெற்றுக்கொண்டவர்களும் நல்லா இருந்து மத்தவங்கள இல்லாம பண்ணிட்டாங்க.


RAAJ68
ஜூலை 21, 2025 12:38

அப்பா என்று யாரை அழைக்கும்


Barakat Ali
ஜூலை 21, 2025 11:41

சில சமூகங்களில், இதுபோன்ற சில பழக்கங்கள் இருக்கலாம்.


ram
ஜூலை 21, 2025 11:15

அது அவர்கள் விருப்பம்.


VSMani
ஜூலை 21, 2025 10:51

இன்னும் இருக்கிறதோ"


Venkataraman
ஜூலை 21, 2025 10:42

இந்த மாதிரியான திருமணங்களில் சில பிரச்சினைகள் ஏற்படலாம்.


Balasubramaniam
ஜூலை 21, 2025 09:25

2 G


Nethiadi
ஜூலை 21, 2025 09:07

தறிகெட்டு திரிகின்ற சங்கீ கூடமா இருப்பார்கள்.


Svs Yaadum oore
ஜூலை 21, 2025 09:42

தமிழ் நாட்டில் பழங்குடியில் இது போன்ற பழக்கம் இன்று வரை உண்டு..... மொத்தமும் திராவிட ராமசாமி கூட்டம் ...


Amsi Ramesh
ஜூலை 21, 2025 09:48

கட்டுமரம் போல் மூணு நாலு இருந்தால் மட்டுமே சிறப்பு


hasan kuthoos
ஜூலை 21, 2025 08:55

பிள்ளையின் அப்பாவிற்கு யாருடைய இனிஷியலை வைப்பார்கள்


தமிழன்
ஜூலை 21, 2025 12:39

வட இந்தியாவில் அப்பாவுடைய இனிஷியலை வைக்க மாட்டார்கள். ஜாதி பெயரை தான் வைப்பார்கள்


நிக்கோல்தாம்சன்
ஜூலை 21, 2025 08:44

அதனால்தானோ என்னவோ ...


சமீபத்திய செய்தி