உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வழக்கு மேல் வழக்கு: வசமாக சிக்கும் மஹூவா - கைது செய்ய தீவிரம்

வழக்கு மேல் வழக்கு: வசமாக சிக்கும் மஹூவா - கைது செய்ய தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்டில், கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கில் சி.பி.ஐ.,எப்.ஐ.ஆர், பதிவு செய்துள்ளதும், அமலாக்கத்துறை பண மோசடி வழக்கும் பதிவு செய்துள்ளதால் திரிணமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., மஹுவா மொய்த்ராவுக்கு நெருக்கடி முற்றுகிறது.மேற்கு வங்க மாநிலம் ஆளும் திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் லோக்சபா எம்.பி., மஹுவா மொய்த்ரா இவர், பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமத்தை குறிவைத்து பார்லிமென்ட் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் வாங்கியதாக, பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே குற்றஞ்சாட்டினார்.இந்த குற்றச்சாட்டை, பார்லி., ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து, அவரை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்தது. இதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மஹுவா மொய்த்ராவின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது.இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக ஊழலுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் லோக்பால் கமிஷன் சி.பி.ஐ.,க்கு, உத்தரவிட்டது.இதையடுத்து மஹூவா மொய்த்ரா மீது எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.இதை தொடர்ந்து அமலாக்கத்துறையும் பண மோசடி வழக்கினை பதிவு செய்துள்ளதால் மஹூவா மொய்த்ராவுக்கு நெருக்கடி முற்றுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் போல எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

S.V. Rajalingha Rajah
ஏப் 03, 2024 17:57

மஹுவா கண்டிப்பாக கைது செய்யப் பட வேண்டும் லஞ்சம் வாங்கி கொண்டுதான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் என்பதற்கு முழு ஆதாரம் உள்ளது மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்


Azar Mufeen
ஏப் 03, 2024 13:47

இப்போ கூட ஒன்னும் கெட்டுபோகவில்லை நம்ம சுவேந்து அதிகாரி போல சரண்டர் ஆயிட்டா நாளைக்கே mis க்ளீன் மொயித்ரா என்று கூறுவார்கள்


Viswanathan Ramakrishnan
ஏப் 03, 2024 02:55

People like this MPs in parliament requires stringent action and are not allowed to con again The required laws for this are to be enacted Even the SC judges including the chief justice are to be included in this law so that the judges cannot give verdict on cases which affects the nation


Vasudevan
ஏப் 03, 2024 01:11

காசுக்கு மயங்காமல் வாக்களித்தால் போதும் உண்டபினெட் அவர்களின் அரசியல் நாகரிகம் உண்டபினெட் அமைச்சரின் அநாகரிக பேச்சு ஒன்று போதும்


Vasudevan
ஏப் 03, 2024 01:10

நல்லவர்கள் வேஷம் போட்ட எல்லோரும் மாட்டிக்கொண்டர்கள் மேப் தேர்தலில் இந்த போலி போராளிகள் போலி மத நல்லிணக்கம் பேசுபவர்கள் எல்லோருக்கும் ஆப்பு நிச்சயம் மக்கள் நன்கு யோசித்து மயங்காமல் வாக்களித்தால் போதும் அவர்களின் அரசியல் நாகரிகம் அமைச்சரின் அநாகரிக பேச்சு ஒன்று போதும்


S. Gopalakrishnan
ஏப் 02, 2024 23:26

மேக்கப் போட்டு கொண்டு மினுக்கியபடி சசி தரூருடன் சல்லாபம் செய்யும் பெண்மணிக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் !


K.n. Dhasarathan
ஏப் 02, 2024 21:25

அதுதானே ௧ஆளும் கட்சியை எதிர்த்து பேசலாமா? இல்லை நாங்கள்தான் சும்மா விடுவோமா? இன்னும் என்னனா துறைகள் இருக்கோ அத்தனை துறைகள் மூலமாகவும் வழக்குகள் பாயும் தேச துரோக வழக்குகூட வாய்ப்பு இருக்கு என்னன்னு நினைசீங்க


GMM
ஏப் 02, 2024 20:56

பிள்ளை ஒழுங்கு பற்றி பெற்றோருக்கு, மாணவர் ஒழுங்கு பற்றி ஆசிரியருக்கு, ஊர் ஒழுங்கு பற்றி நாட்டாமைக்கு கவலை வேட்பாளர் ஒழுங்கு பற்றி யாருக்கு கவலை? தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்லது வாக்காளர் ? யாரிடமும் அரசியல் கடிவாளம் இல்லை கேள்விக்கு, கேலிக்கு கூட லஞ்சம் கேட்பர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றால் ஆயுள் கெட்டி


Ramesh Sargam
ஏப் 02, 2024 20:09

வழக்குமேல் வழக்கு ஓகே என்று தண்டனை கிடைக்கும்? சும்மா வழக்கு பதிவு செய்து என்ன பயன்? இந்திய நீதிமன்றங்களில் பல வருடங்கள் ஒரு வழக்கு ஓடுமே? அப்புறம் என்று தண்டனை கிடைக்கும்?


vijay s
ஏப் 02, 2024 20:04

New dinamalar site is awesome


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை