உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலி ஆவணங்களால் ஜாமின் கிடைக்க உதவியவர் மீது வழக்கு

போலி ஆவணங்களால் ஜாமின் கிடைக்க உதவியவர் மீது வழக்கு

ஷிவமொக்கா; போலி ஆவணங்களை உருவாக்கி, ஷிவமொக்கா நீதிமன்றத்தில் ஐந்து பேருக்கு ஜாமின் கிடைக்க உதவியவர் மீது, வழக்கு பதிவாகியுள்ளது.குற்ற வழக்கு தொடர்பாக, இப்ராகிம் கலீல், பைரோஜ், அர்பாஜ், நயாஜ் அகமது, சுஹேல் ஆகியோர் ஷிவமொக்கா சிறையில் அடைபட்டிருந்தனர். சில மாதங்களுக்கு முன், இவர்களுக்கு சித்ரதுர்கா, ஹொலல்கெரேவை சேர்ந்த ஜெகதீஷ் உத்தரவாதம் கொடுத்து, ஜாமின் பெற்றார்.ஜாமினில் வந்த ஐவரில், நால்வர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் சுஹேல் ஆஜராகவில்லை. எனவே உத்தரவாதம் அளித்த ஜெகதீஷுக்கு, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதன்படி நேற்று ஷிவமொக்கா நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார்.அவர், 'நான் யாருக்கும் ஜாமின் அளிக்கவில்லை. பிரமாண பத்திரத்தில் உள்ள போட்டோ, என்னுடையது இல்லை. குற்றவாளிகள் எனக்கு அறிமுகம் இல்லை' என விவரித்தார். அவரது பெயரில் போலி ஆவணங்களை உருவாக்கி, கைதிகளுக்கு ஜாமின் கொடுத்திருப்பது தெரிந்தது.இதை தீவிரமாக கருதிய நீதிமன்றம், போலி நபரை கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டது.ஷிவமொக்காவின், ஜெயநகர் போலீசாரும் அந்நபர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ