உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்.,கில் இருந்து வெளியேறாமல் தடுக்க லட்சுமண் சவதிக்கு முதல்வர் ஐஸ்

காங்.,கில் இருந்து வெளியேறாமல் தடுக்க லட்சுமண் சவதிக்கு முதல்வர் ஐஸ்

எம்.எல்.ஏ., லட்சுமண் சவதியை, காங்கிரசில் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில், அவரது தொகுதிக்கு முதல்வர் சித்தராமையா தாராளமாக நிதியுதவி வழங்கியுள்ளார்.கடந்த 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், பெலகாவி, அதானி தொகுதியில் லட்சுமண் சவதி, பா.ஜ., சீட் எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. கோபமடைந்த அவர், பா.ஜ.,வை விட்டு விலகி, காங்கிரசுக்கு சென்றார். அதானியில் போட்டியிட்டு வென்றார்.விஜயேந்திரா மாநில பா.ஜ., தலைவரான பின், கட்சியில் இருந்து விலகியவர்களை, மீண்டும் அழைத்து வரும் முயற்சியில் இறங்கினார். முதற்கட்டமாக ஜெகதீஷ் ஷெட்டரை, பா.ஜ.,வுக்கு அழைத்து வந்தார். அதேபோன்று லட்சுமண் சவதியை கட்சிக்கு அழைத்து வர, தலைவர்கள் முயற்சிக்கின்றனர். லட்சுமண் சவதி பா.ஜ.,வுக்கு செல்வதை தடுக்க, காங்கிரஸ் முயற்சிக்கிறது. ஷெட்டர் பா.ஜ.,வுக்கு சென்ற மறுநாளே, துணை முதல்வர் சிவகுமார், லட்சுமண் சவதியை சந்தித்து, ஆலோசனை நடத்தினார். கட்சியை விட்டு செல்ல வேண்டாம் என, கேட்டுக்கொண்டார்.இந்நிலையில் முதல்வர் சித்தராமையா, லட்சுமண் சவதியின் அதானி தொகுதிக்கு, தாராளமாக நிதியுதவி வழங்கி அவர் காங்கிரசை விட்டு செல்வதை தடுத்துள்ளார். இந்த தொகுதியின் முக்கிய திட்டமான அம்மாஜேஷ்வரி நீர்ப்பாசன திட்டத்துக்கு, ஒப்புதல் அளித்துள்ளார்.மொத்தம், 1,486 கோடி ரூபாய் செலவிலான, அம்மாஜேஷ்வரி திட்டத்தை, சட்டசபை தேர்தல் நேரத்தில், பா.ஜ., அரசின் அன்றைய முதல்வர் பசவராஜ் பொம்மை துவக்கி வைத்தார். ஆனால் காங்கிரஸ் அரசு வந்ததும், பணிகள் நிறுத்தப்பட்டன. இப்போது முதல்வர் சித்தராமையா, இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.பிப்ரவரி 18 அல்லது 19ல், பணிகளை முதல்வர் துவக்கி வைப்பார் என, தகவல் வெளியாகியுள்ளது. இது, அதானியின், 11 கிராமங்களின், 24 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பகுதிகள், 13 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டமாகும்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை