உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோல்கட்டா மருத்துவமனையில் மத்திய படையினர் குவிப்பு

கோல்கட்டா மருத்துவமனையில் மத்திய படையினர் குவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: கோல்கட்டாவில் இளம் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவமனைக்கு மத்திய துணை ராணுவப்படையான சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. வழக்கமாக இந்த படையினர் பார்லிமென்ட் மற்றும் விமான நிலையங்களில் தான் பாதுகாப்பு படையினர் இருப்பார்கள்.மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இளம் பயிற்சி டாக்டர் ஒருவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்தை கண்டிப்பதாக கூறி கோல்கட்டாவில் போராட்டத்தில் ஈடுபட்ட வன்முறையாளர்கள், இந்த மருத்துவமனையை சூறையாடினர். அப்போது தடயங்கள் அழிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், இந்த வன்முறை குறித்து மாநில அரசுக்கும், போலீசாருக்கும் அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை தொடுத்தது. விசாரணையின் போது நீதிபதிகள், ஆயிரக்கணக்கானோர் கல்லுாரிக்குள் நுழைந்து சூறையாடியுள்ளனர். ஆனால், அங்கு பாதுகாப்புக்கு அதிகளவில் போலீசார் இல்லை. இருந்தவர்களும் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. டாக்டர் கொலை சம்பவம் நடந்தவுடன், அந்தக் கல்லுாரி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பை மாநில அரசு பலப்படுத்தியிருக்க வேண்டும். இதில் அரசு தவறிவிட்டது என கேள்வி எழுப்பியிருந்தனர்.இந்நிலையில் இந்த மருத்துவமனைக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துணை ராணுவப்படையான சிஐஎஸ்எப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து சிஐஎஸ்எப் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛ எங்கள் பணியை செய்கிறோம். சில பணிகளுக்காக இங்கு வந்துள்ளோம். எங்களது பணி முடிந்த பிறகு மூத்த அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்கள். உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி இங்கு வந்துள்ளோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Swaminathan L
ஆக 21, 2024 20:47

சிஐஎஸ்எஃப் சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யுரிடி ஃபோர்ஸ் எனப்படுவது மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப்படை, இந்திய அரசின் ஆயுதக் காவல் படைகளில் ஒன்று. அது துணை ராணுவப் படை அல்ல.


தென்காசி ராஜா ராஜா
ஆக 21, 2024 17:35

நாட்டுல எங்கே பார்த்தாலும் கற்பழிப்பு பலாத்காரம்.இத பன்னுறவங்கள உடனேயே சுட்டு கொல்லுங்க நடுரோட்டில்


SUBBU,MADURAI
ஆக 21, 2024 19:10

இன்னும் இரண்டு நாட்களில் மேற்குவங்க பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.தீதிக்கு ஆப்பு ரெடி...


Indian
ஆக 21, 2024 16:44

மத்திய படையினர் குவிப்பு ???? சம்பவம் நடந்தபொழுது அந்த பெண் மருத்துவரைக் காப்பாற்ற ஆளில்லை .....கொலைகாரனை தூக்குல போடுங்க , இல்லனா மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்


தத்வமசி
ஆக 21, 2024 16:35

தீதிக்கு இப்போது மத்திய அரசின் உதவி வேண்டும் ? தேர்தல் காலங்களில் இளைஞ்சர்களும், பெண்களும் கொல்லப்பட்ட போது இந்த மக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ? அப்போதெல்லாம் போராட்டமா ? என்று தள்ளி இருந்தனர். தங்களில் ஒருவருக்கு நடந்தவுடன் போராட்டம் செய்கின்றனர்.


Mr Krish Tamilnadu
ஆக 21, 2024 16:33

பயிற்சி மருத்துவர் யார் யார் ட்ரீட்மெண்ட்க்கு உதவியாளராக இருந்தார். ரிப்போர்ட் தவறாகி விட்டாதா?. ஏதேனும் கண்டுபிடித்து விட்டாரா?. அவர் ட்ரிட்மெண்ட் அளித்த நோயாளிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளியுங்கள்.


Barakat Ali
ஆக 21, 2024 16:22

மத்திய படையினர் குவிப்பு ???? சம்பவம் நடந்தபொழுது அந்த பெண் மருத்துவரைக் காப்பாற்ற ஆளில்லை .....


Palanisamy Sekar
ஆக 21, 2024 16:19

மம்தாவின் வீழ்ச்சிக்கு இந்த மரணமே உத்தரவாதம் கொடுக்கின்றது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 21, 2024 22:08

தமிழகத்தைப் போல அங்கே 2026 இல் சட்டசபைத் தேர்தல் வருகிறது ..... மக்கள் மீண்டும் திரிணாமூல் கட்சியையே அதிகாரத்துக்கு தேர்ந்தெடுப்பார்கள் ..... அவரே மீண்டும் முதல்வராவார் .....


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 22, 2024 11:28

சரியாக சொன்னீர்கள் தர்மராஜ். மேற்கு வங்கம் பின்பற்றுவது தமிழகத்தை. இங்கே திமுக நடந்து கொள்வதை போலவே அங்கே திரிணாமுல் நடந்து கொள்கிறது. திரிணா முல் காங்கிரஸ் என்பதே தி.மு.கா. தான். இங்கே 500க்கும் 1000க்கும் இலவச பேருந்துக்கும் டாஸ்மாக் ஆசைப்பட்டு இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு எப்படி இந்துக்களே வாக்களிக்கிறார்களோ அதே போல் தான் அங்கேயும். இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் கோயில்களில் அர்ச்சகராக உள்ள பிராமணன் சமுதாயத்தை சேர்ந்தவர்களே கேவலமான திராவிட கட்சிகளுக்கு வாக்களிப்பது அல்லது யாருக்குமே வாக்களிக்காமல் வீடுகளுக்கு உள்ளே முடங்கி போவது தான்.


gmm
ஆக 21, 2024 15:49

உச்ச நீதிமன்ற உடன் விசாரணை, சிபிஐ புலனாய்வு மற்றும் மத்திய பாதுகாப்பு படை குவிப்பு குற்றம், தடயம் மறைக்க மாநில அதிகார வர்க்க ஈடுபாடு உள்ளது போல் தெரிகிறது. தமிழகம், மேற்கு வங்கம்.. போன்ற மாநில நிர்வாகம் மக்கள் பிரதிநிதிக்கு எல்லையற்ற அதிகாரம் உள்ளது போல் மக்களிடம் காட்டி வருகின்றனர். உச்ச நீதிமன்ற, மத்திய அரசு நடவடிக்கை மூலம் மாநிலத்திற்கு மேல் அதிகார அமைப்பு உள்ளது என்று உறுதி செய்ய வேண்டும். மத்திய படை திரும்பும் வரை மாநில போலீஸார் காஸ்மீர் போன்ற கடுமையான இடங்களில் நியமிக்க வேண்டும். டாக்டர்கள் தன் பணியில் சுணங்கினால், பல உயிர்கள் பிழைக்க முடியாது. அரசியல்வாதிகள் மறக்க முடியாத தீர்ப்பு தேவை.


ராமகிருஷ்ணன்
ஆக 21, 2024 14:54

மம்தாவின் திரிணமூல் அரசு நிச்சயம் டிஸ்மிஸ் செய்து விடுவார்கள். அதற்காக முன்னேற்பாடு தான் இது கள்ளசாராய அரசும் டிஸ்மிஸ் செய்யபட்ட வேண்டும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை