பீஹாரில் முதல்வர் நிதீஷ்குமார் அமைச்சரவை விரிவாக்கம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
புதுடில்லி: அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார் பீஹார் முதல்வர் நிதீஷ்குமார்.பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தது. கூட்டணி அரசில் இருந்து திடீரென விலகி, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தார் நிதீஷ் குமார்.கவர்னர் மாளிகையில் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து தனது ராஜினாமா செய்தார். பின் பா.ஜ.வுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்வராக கடந்த ஜன.28-ல் பதவியேற்றார். அத்துடன் லோக்சபா தேர்தலுக்காக அமைந்துள்ள ‛‛இண்டியா'' கூட்டணியிலிருந்தும் வெளியேறினார்.இந்நிலையில் தனது அமைச்சரவை விரிவாக்கம் செய்ய வேண்டி மேலும் 21 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.இன்று அவர்களுக்கு கவர்னர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.