உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலை சிற்றுண்டி ஏற்பாடு சபாநாயகருக்கு பாராட்டு

காலை சிற்றுண்டி ஏற்பாடு சபாநாயகருக்கு பாராட்டு

பெங்களூரு, : எம்.எல்.ஏ.,க்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கியதற்கு சபாநாயகர் காதருக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கநாத் பாராட்டு தெரிவித்தார்.கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர், வழக்கமாக 1-0:30 மணி அல்லது 11:00 மணிக்கு தான் துவங்கும். இம்முறை தினமும் காலை 9:45 மணிக்கு துவங்குகிறது.எனவே, கூட்டத்துக்கு விரைவில் வர வேண்டும் என்பதற்காக, அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் சிற்றுண்டி வழங்கப்படும் என்று சபாநாயகர் காதர் தெரிவித்திருந்தார்.பெங்களூரு நகரின் பிரபல ஹோட்டல்களில் இருந்து, தினமும் சிற்றுண்டி கொண்டு வரப்படுகிறது.இது குறித்து, சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:காங்., - ரங்கநாத்: சபாநாயகர் கொண்டு வரும் மாற்றங்கள் பாராட்டுக்குரியவை. அனைத்து உறுப்பினர்களும் குறிப்பிட்ட நேரத்துக்கு சட்டசபைக்கு வர வேண்டும் என்பதற்காக, சிற்றுண்டி வழங்குவதற்கு நன்றி. இதை நான் வரவேற்கிறேன்.செயலர் மூலம், சட்டசபை அலுவலர்களுக்கு சீருடை அறிமுகப்படுத்தியது வரவேற்கத்தக்கது.சபாநாயகர் காதர்: அதெல்லாம் சரி, நீங்கள் சரியான நேரத்துக்கு சட்டசபைக்கு வந்தால் போதும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ