உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.65 கோடி போச்சு கதறும் காங்கிரஸ்

ரூ.65 கோடி போச்சு கதறும் காங்கிரஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி, வரி நிலுவை தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், வங்கிக் கணக்கில் இருந்து 65 கோடி ரூபாயை வருமான வரித் துறை எடுத்துள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.காங்கிரஸ் கட்சி, முந்தைய ஆண்டுகளில் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்குகளில், 210 கோடி ரூபாய் அளவுக்கு முறையாக கணக்கு காட்டப்படவில்லை என வருமான வரித்துறை கூறியிருந்தது.இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் அதன் இளைஞர் பிரிவின் சில வங்கிக் கணக்குகளை முடக்கி, வருமான வரித் துறை சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது.இது தொடர்பாக விசாரித்த வருமான வரித் துறை தீர்ப்பாயம், முடக்கி வைக்கும் உத்தரவுக்கு தடை விதித்தது. அதே நேரத்தில், வழக்கு முடியும் வரை, இந்த வங்கிக் கணக்குகளில், 115 கோடி ரூபாய் வரை இருப்பு வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், காங்கிரஸ் பொருளாளர் அஜய் மாகன், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:வருமான வரிக் கணக்கு தொடர்பான வழக்கு தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், அதை மதிக்காமல், எங்களுடைய பல வங்கிக் கணக்கில் இருந்து, 65 கோடி ரூபாயை வருமான வரித் துறை எடுத்துள்ளது.இது ஜனநாயகத்துக்கு எதிரானதாகும்; சட்டத்துக்கு புறம்பானதாகும். இது போன்ற மத்திய அரசு அமைப்புகளின் துஷ்பிரயோகங்களை கண்டுகொள்ளாமல் விட்டால், ஜனநாயகத்துக்கு ஆபத்தை விளைவிக்கும்.நாட்டில் பல கட்சிகள் அரசியலில் இருப்பது பிடிக்காமல், ஒரு கட்சி அரசியல் இருக்க வேண்டும் என்பதற்காக, பழி வாங்கும் நடவடிக்கைகளில் மத்திய அமைப்புகள் ஈடுபடுத்தப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

M Ramachandran
பிப் 22, 2024 17:47

சட்டநுணுக்கங்கலிய்ய ஆறுய்ந்த அவருக்கு தெரியும் அது சட்டப்படிதான் நடக்கிறது என்று


GANESUN
பிப் 22, 2024 12:13

நேத்து என் வீட்டு ஓனர் வாடகை ஏத்தி விட்டார், இதற்க்கு காரணம் பிஜேபி மற்றும் மோடிதான் காரணம்.. என்ன நான் சொல்றது...


SIVA
பிப் 22, 2024 14:07

இது பரவாயில்லை எ டீ எம் பணம் எடுத்து திரும்பும் போது தடுக்கி விழுந்துவிட்டான் , அதுக்கு மோடியை திட்டி விட்டு போகிறான்


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 22, 2024 10:52

நான் வருமான வரித்துறைக்கு வரி செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் இருந்தாலும் வருமான வரித்துறை என் வங்கிக் கணக்கில் இருந்து என் அனுமதி இன்றி பணத்தை எடுத்துவிட முடியாது. சட்டம் எல்லா துறைகளுக்கும் ஒன்றுதான். மல்லையா நீரவ் மோடி முகுல் சோக்சி லலித் மோடி ஆகியோர் பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் அரசு பணத்தை ஏமாற்றி எடுத்து சென்றிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து இதுவரை அரசு ஒரு பைசா கூட வசூல் செய்யவில்லை. மாறாக அவர்களது சொத்துக்களின் ஒரு பகுதியை மட்டுமே பிடித்து வைத்திருக்கிறது. (அவர்கள் தங்களது சொத்துக்களை முன் ஜாக்கிரதையாக பல பினாமிக்கள் பெயரில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்) காங்கிரஸ் கட்சி வருமான வரி செலுத்தவில்லை என்றால் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சொத்துக்களை மட்டுமே பிடித்து வைக்கமுடியுமே தவிர வங்கியில் இருந்து பணத்தை சுரண்ட முடியாது. இப்போது நடந்திருப்பது தெளிவான சட்ட விதி மீறல்.


ஆரூர் ரங்
பிப் 22, 2024 12:05

அசையும் மற்றும் அசையாச் சொத்து எதிலிருந்து வேண்டுமானாலும் ஜப்தி வசூல் செய்யலாம். வங்கிக் கணக்கும் அடக்கம். இது 4 வருடங்களுக்கு???? முந்தைய வரி. அரசியல்வாதிகள் மக்களுக்கு முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டும்


veeramani
பிப் 22, 2024 09:50

ஏ ம்பா... சிதம்பரம் மந்திரியா இருந்தப்ப என்ன என்ன செய்தீர்கள்?? உங்களது இந்திரா காந்தி கொண்டுவந்த மிசா சட்டத்தைவிடவா இப்போது அக்கிரமம் நடக்கிறது. இந்தியர் எவராயினும் வரி செலுத்த வேண்டும். ஆள் என்ன, கட்சி என்ன.. போவியா ?????


duruvasar
பிப் 22, 2024 08:11

யோவ் , எந்த கொம்பனும் யார் கணக்கிலுமிருந்து அவனுக்கு சேராத பணத்தில் உரிமை கொண்டாட முடியாது. நீதிமன்றம் சென்று முறையிடுங்கள். பொருளாதார மேதை, முன்னாள் நிதியமைச்சர், சுப்ரீம் கோர்ட்டில் சீனியர் வழக்கறிஞர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான உங்கள் கட்சியை சேர்ந்த பா.சிதம்பரம் டில்லியில்தானே இருக்கிறார். பின் எதற்க்கு இந்த கூப்பாடு. காலி குடம் சத்தம்தான் செய்யும்.


Duruvesan
பிப் 22, 2024 07:18

என்னோட NRO accountla 5 லக்சம் cheque clear பண்ண source எங்க கூந்தல் எங்க எல்லாம் கேட்டாங்க, இத்தனைக்கும் பிரைவேட் பேங்க், ஆனால் பிஜேபி கட்சிக்கு கோடி கோடியா வரும் எவனும் கேட்க மாட்டான் கேட்டா அவன் tax கட்டிட்டான், நானும் தான் தவறாமல் tax கட்டறேன், பண விஷயத்தில் ஆட்சி கவிப்பில் பிஜேபி காங்கிரஸ் ரெண்டும் ஒரே நாணயம்


வீரபத்திரன்,கருங்காலக்குடி
பிப் 22, 2024 07:07

இந்த காங்கிரஸ்காரனுக செய்யிறது பூரா சட்டத்துக்கு புறம்பான வேலை ஆனால் இவர்கள் வருமானவரி துறையை சட்டத்துக்கு எதிராக இருப்பதாககுற்றம் சொல்கிறார்கள் இதை மக்கள் யாரும் நம்பப் போவதில்லை.


Barakat Ali
பிப் 22, 2024 13:37

திமுக-காங்கிரசின் அடிமைகள் நம்புவார்களே ????


J.V. Iyer
பிப் 22, 2024 06:59

சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் செய்திருக்கிறார்கள். பின்னே எதற்கு கூச்சல்..


raja
பிப் 22, 2024 06:23

வருமான வரியை முறையா கட்ட வக்கில்லாமல் ஏமாத்துறது....இதுல ஜனநாயகம் உரிமைந்நு உருட்டுவது...இதுவே ஒரு சாமானியனா இருந்த உள்ள தூக்கி போடுவாங்க...


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை