உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீன படையெடுப்பு குறித்த மணிசங்கர் அய்யரின் கருத்தால் சர்ச்சை: பாஜ கண்டனம், காங்., சமாளிப்பு

சீன படையெடுப்பு குறித்த மணிசங்கர் அய்யரின் கருத்தால் சர்ச்சை: பாஜ கண்டனம், காங்., சமாளிப்பு

புதுடில்லி: 1962ம் ஆண்டு சீனா படையெடுத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்த கருத்து சர்ச்சை ஆகி உள்ளது. இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொளகிறேன் என அவர் கூறியுள்ளார். இது அவரின் தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் நழுவிக் கொண்டது. அதேநேரத்தில் பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் அய்யர் தெரிவிக்கும் கருத்துகள் அடிக்கடி சர்ச்சை ஆகிறது. '' பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளதால், அந்நாட்டை இந்தியா மதிக்க வேண்டும் '' என அவர், முன்பு பேசியிருந்த வீடியோ மீண்டும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அது அவரின் தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ், சமாளித்தது.இந்நிலையில், டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மணிசங்கர் அய்யர் பேசும் போது, 1962 ம் ஆண்டு இந்தியா மீது சீனா படையெடுத்தது என குற்றம்சாட்டப்படுகிறது '' எனக்கூறியிருந்தார். ஆனால், அந்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே போர் நடந்த நிலையில், குற்றம்சாட்டப்படுகிறது என்ற வார்த்தையை மணிசங்கர் கூறியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் கண்டனம் தெரிவிக்க துவங்கினர். இதனையடுத்து, சீன படையெடுப்பு குறித்து பேசும்போது குற்றம்சாட்டப்படுகிறது என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்தியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக மணிசங்கர் அய்யர் கூறினார்.அதேநேரத்தில், சீன படையெடுப்பை திருத்த முயற்சிக்கும் செயல் வெட்கக்கேடானது என பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின் அமித் மாளவியா வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியதாவது: ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் என்ற கோரிக்கையை சீனாவிற்காக நேரு திரும்ப பெற்றார். ராஜிவ் தொண்டு நிறுவனத்திற்கு நிதியுதவி பெற, சீனாவிடம் ராகுல் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார். சீன பொருட்களுக்காக இந்திய சந்தையை சோனியாவின் ஐமுகூ., அரசு திறந்துவிட்டதால், நாட்டின் சிறுகுறு வணிகம் பாதிக்கப்பட்டது. இந்தியாவிற்கு சொந்தமான 38 ஆயிரம் சதுர கி.மீ., நிலத்தை சீனா ஆக்கிரமித்த போதும், அந்நாட்டின் படையெடுப்பை மணிசங்கர் அய்யர் திருத்தி எழுத முயற்சி செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: குற்றம்சாட்டப்படுகிறது என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்தியதற்கு மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கேட்டுள்ளார். அவரது வயதை கருத்தில் கொண்டு சலுகை வழங்கப்பட வேண்டும். அவரது கருத்தில் இருந்து காங்கிரஸ் விலகிக் கொள்கிறது . 1962 ல் இந்தியா மீது சீனா படையெடுத்தது நிஜம். 2020 மே மாதம் லடாக்கில் சீன ராணுவம் ஊடுருவியது. இதனால் நமது வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இவ்வாறு அந்த பதிவில் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

JAGADEESANRAJAMANI
ஜூன் 01, 2024 11:28

வெளியில் உள்ள துரோகிகளைவிட நமது நாட்டிலுள்ள தேச துரோகிகள் மிகவும் ஆபத்தானவர்கள்.முதலில் அவர்களை களை எடுக்கப்படவேண்டும்.ஜெய்ஹிந்த்.


A1Suresh
மே 31, 2024 14:20

தலைசிறந்த நெம்பர் 1 தேசதுரோகி மணிசங்கர் ஐயர் மற்றும் நெம்பர் 2 தேசதுரோகி சுப்பிரமணிய சுவாமி


sankaran
மே 30, 2024 18:07

மணிசங்கர் ஐயரை சிறையில் அடைக்க வேண்டும்


Mohan
மே 30, 2024 14:05

ராஜீவ் காந்தியின் மீது திணிக்கப்பட்ட பொறுப்பு ஆட்சியின் போது அவரது சகாக்கள் மணிசங்கர்,சாம் பிடரோடா, ராஜேஷ் பைலட், போன்ற உதவாக்கரை சகாக்களை அதிகாரத்தில் அமர்த்தினார். அவர்களை அப்பொழுது டில்லியில் உள்ளவர்கள் "" டூன் ஸ்கூல் கூன்ஸ்"" என்றுதான் டேராடூன் பள்ளியின் முரடர்கள் என்று அர்த்தம் அவர்களை குற்ப்பிடுவார்கள். ஆகையால் மணிசங்கர் ஐயர் வயதாகியும் அப்படியே உள்ளார். இந்த குரூப்பை சேர்ந்த காங்கிரஸ்காரர்கள் என்னென்ன நாட்டிடம் என்னென்ன விசயத்தில் காசு பார்க்க ஒப்பந்தம் போட்டிருக்காங்களோ??அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்


Bakavathi
மே 30, 2024 10:48

கனிமொழி சொல்கிறார் "சீனா நமது எதிரி நாடு இல்லையே" என்று, இந்த மணி சொல்கிறான் "பாகிஸ்தானில் அணுகுண்டு உள்ளது" என்று. மொத்ததில் திமுக காங்கிரஸ் சீனாவை சொந்த நாடு போல் பார்க்கிறார்கள். இந்தியாவை அந்நிய நாடு போல் பேசுகிறார்கள். இவர்களையும் சில மக்கள் கண்மூடி தனமாக நம்புகிறார்கள்


R SRINIVASAN
மே 30, 2024 08:42

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உய்க்கர் முஸ்லிம்களுக்கு எவ்வளவு கொடுமைகள் சீனாவில் நடக்கிறதோ அவ்வளவு கொடுமைகள் இங்குள்ள முஸ்லிம்களுக்கு நடக்கும்.


RAJ
மே 30, 2024 08:19

இவர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. மயிலாடுதுறை மக்களே ... உங்களுக்கு அவமானம் இன்னும் பொறுத்துக்கொண்டு இருந்தால்.. விரட்டி அடியுங்கள். இல்லாவிட்டால் அடித்து விரட்டுங்கள்.,


Vijayakumar Srinivasan
மே 30, 2024 04:52

வயதானவர்கள் ஒதுங்கி இருப்பதுதான் நல்லது


Seenu Krishnamurthy
மே 31, 2024 08:01

யார் கூப்பிட்டார்கள்,


sankaranarayanan
மே 29, 2024 23:11

பேசியவர் மூப்பை அடைந்தவர் பேசிவார்த்தைகளோ மூப்பிற்கு ஏற்றதுபோன்றல்ல மூப்பை அடைந்தவர்கள் கிருஷ்ணா ராமா என்று வீட்டிலே முடங்கி கிடக்க வேண்டும் மூப்பிற்கு சப்பைக்கட்டு கட்டி பேசுவதோ அதைவிட மூப்பிற்கு உதவாவது பாவம் அவர் என்னய்யா செய்வார் அவர் இருப்பதே மூப்பை அடைந்த கட்சி.


theruvasagan
மே 29, 2024 22:06

இந்த ஆளுக்கும் பித்ரோடாவுக்கும் கட்சித் தலைமை மேல ஏதோ காண்டு இருக்கு போல. அதனாலதான்.இந்த மாதிரி சேம் சைடு கோல் போட்டு இம்சை பண்றாங்க. இப்படியே ஆடி அவங்க ஆட்டத்தை சீக்கிரம் குளோஸ் பண்ணிட்டா தேவலை.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை