உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆட்டோக்களுக்கு சமையல் காஸ் உணவு துறை அதிகாரிகள் சோதனை

ஆட்டோக்களுக்கு சமையல் காஸ் உணவு துறை அதிகாரிகள் சோதனை

தங்கவயல் : தங்கவயலில் சட்ட விரோதமாக சமையல் காஸை ஆட்டோவுக்கு எரிபொருளாக விற்பனை செய்து வரும் கடைகளில், கோலார் மாவட்ட உணவு மற்றும் பொது விநியோகத்துறை துணை இயக்குனர் அதிரடி சோதனை நடத்தினார்.தங்கவயல் ராபர்ட்சன் பேட்டை, ஆண்டர்சன் பேட்டை, உரிகம் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஆட்டோக்களுக்கு எரிபொருளாக சமையல் எரிவாயுவை விற்பனை செய்து வருவதாக, கோலார் மாவட்ட உணவு மற்றும் பொது வினியோகத் துறைக்கு புகார்கள் வந்தன.இதையடுத்து, கோலார் மாவட்ட துணை இயக்குனர் லதா, உதவி இயக்குனர்கள் பிரகாஷ் மற்றும் மல்லிகர்ஜுனா தலைமையில் அதிகாரிகள் ராபர்ட்சன் பேட்டை நான்காவது பிளாக் உட்பட நான்கு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.இவர்கள் சோதனைக்கு வரும் தகவல் கசிந்து விட்டதால், சட்டவிரோதமாக காஸ் விற்பனை செய்து வருபவர்கள்,கடைக்கு பூட்டு போட்டுவிட்டு தலைமறைவாகினர்.ராபர்ட்சன் பேட்டை 4வது பிளாக் பகுதியில் உணவுத் துறை அதிகாரிகள், அதன் உரிமையாளர் வரட்டும் என காத்திருந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக காத்திருந்தவர்கள், கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.அங்கு காஸ் பில்லிங் கன்வெர்டர் கருவி, எடை, 10 காஸ் சிலிண்டர்கள் இருந்தன. அவையாவும் 'இண்டேன்' கம்பெனி காஸ் சிலிண்டர்கள். அவற்றை பறிமுதல் செய்தனர்.உணவுத் துறை இணை இயக்குனர் லதா கூறுகையில், ''தங்கவயலில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் சட்ட விரோதமாக உரிமம் இல்லாமல் அதிக விலைக்கு காஸ் பில்லிங் செய்யப்படுகிறது. விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்,'' என்றார்.தங்கவயலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் காஸ் மூலம் இயக்கப்படுகின்றன.தங்கவயலில் இரண்டு இடங்களில் உள்ள காஸ் பங்க்குகளில் பெரும்பாலான ஆட்டோக்கள் காஸ் நிரப்புவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை