உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவாக்சின் பாதுகாப்பானது: தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

கோவாக்சின் பாதுகாப்பானது: தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'கோவாக்சின்' கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என அதனை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.கொரோனா பரவலின்போது, ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் கோவிஷீல்டு என்ற தடுப்பூசி மருந்தை தயாரித்தது. 'சீரம் இந்தியா' நிறுவனம் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, அதே பெயரில் தடுப்பூசி தயாரித்தது. குறைந்தபட்சம் ஒருவருக்கு இரண்டு டோஸ் வீதம், நம் நாட்டில் மட்டும் 175 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bwgz3ofq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஒப்புதல்

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பக்க விளைவுகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாகவும், பலர் மரணம் அடைந்ததாகவும் பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கு விசாரணையின்போது, ' தாங்கள் தயாரித்த தடுப்பூசி மருந்தால் ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. டி.டி.எஸ்., எனப்படும் 'த்ரோம்போசிஸ் மற்றும் த்ரோம்போசைடோபினியா சிண்ட்ரோம்' என்ற அந்த நோய் தாக்கினால், மூளை அல்லது உடலின் ஏதாவது ஒரு பகுதியில் ரத்தம் உறைந்து கட்டியாகிவிடும். ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் குறையலாம்' என ஒப்புக்கொண்டது.இதனையடுத்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனினும், தடுப்பூசி போட்டுக் கொண்ட சில மாதங்களுக்குள் பக்க விளைவுகள் ஏற்படலாமே தவிர, ஆண்டுகள் கடந்த பின் உண்டாகும் நோய்களை தடுப்பூசியுடன் தொடர்புபடுத்த முடியாது என சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனையடுத்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'கோவாக்சின்' தடுப்பூசி பற்றியும் பலரும் சந்தேகம் கிளப்பினர்.

விளக்கம்

இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என அதனை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. 'கோவாக்சின் தடுப்பூசியால் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது. கோவாக்சின், மத்திய சுகாதார அமைச்சகத்தால் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே செயல்பாட்டுக்கு வந்தது. மாரடைப்பு, ரத்தம் உறைதல் போன்ற பிரச்னைகள் கோவாக்சின் தடுப்பூசியால் ஏற்படாது' எனவும் பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kasimani Baskaran
மே 03, 2024 06:01

எல்லா தடுப்பூசிகளும் லட்சத்தில் ஒருவருக்கு ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உலகறிந்த உண்மை ஊசி போடாமல் நோய் தொற்றியிருந்தால் பல உறுப்புக்கள் செயலிழந்திருக்கும் ஒரு தடுப்பூசி கூட போடவில்லை என்றால் உயிருக்குக்கூட உத்திரவாதம் கிடையாது அத்தகைய நிலையில் இந்திய அரசு ஏற்பாட்டில் போடப்பட்ட தடுப்பூசியின் பக்க விளைவுகளைப்பற்றி கவலைப்படுவது அறிவுடமை ஆகாது


Ramesh Sargam
மே 02, 2024 20:13

ஒருவேளை பாதுகாப்பில்லை என்றாலும், இனி அந்த வாக்சினை போட்டுக்கொண்டவர்கள் என்ன செய்யமுடியும்? இனி வரும் காலங்களில் அவர்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும், அவ்வளவுதான்


Priyan Vadanad
மே 02, 2024 19:08

கொரோனா சர்டிபிக்கட்டிலிலிருந்து எடுக்கப்பட்ட மோடி படம் இப்போது திரும்பவும் வந்து ஒட்டிக்கொள்ளுமா?


ஆரூர் ரங்
மே 02, 2024 20:07

புத்தி எதாவது ஆகிவிட்டதா? தேர்தல் விதிகளின்படி தாற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது.. அவ்வளவுதான் விடியல் ஒட்டிக் கொண்ட ஸ்டிக்கர் மாதிரி அல்ல அது. 135 கோடி பாரத மக்களை தடுப்பூசி மூலம் காப்பாற்றிய மனித புனிதர்.


Priyan Vadanad
மே 02, 2024 19:07

எல்லாம் நல்லதாக இருந்தால் மோடியின் படம் ஏன் கொரோனா சர்டிபிகேட்டில் இப்போது மறைந்துகொண்டது, அதுவும் இந்த பிரச்சினை வெளிவந்த பிறகு? தேர்தலில் ஜெயித்தபிறகு திரும்பவும் வந்து ஒட்டிக்கொள்ளுமோ


Priyan Vadanad
மே 02, 2024 19:07

எல்லாம் நல்லதாக இருந்தால் மோடியின் படம் ஏன் கொரோனா சர்டிபிகேட்டில் இப்போது மறைந்துகொண்டது, அதுவும் இந்த பிரச்சினை வெளிவந்த பிறகு? தேர்தலில் ஜெயித்தபிறகு திரும்பவும் வந்து ஒட்டிக்கொள்ளுமோ


ديفيد رافائيل
மே 02, 2024 18:12

நான் Corona time ல எந்தவித தடுப்பூசியும் எடுத்துக் கொள்ளவில்லை எனக்கு corona சமயத்துல சளி பிடித்தும் கூட ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடவில்லை


சிவக
மே 03, 2024 09:11

உன் தாய் தந்தை செய்த புண்ணியம் கொரோனாவில் இருந்து இதுவரை தப்பித்துக்கொண்டீர். இனியும் ரிஸ்க் எடுக்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை