உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு முக்கிய சதிகாரன் மருத்துவ மாணவனை கைது செய்தது சிறப்புபடை

டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு முக்கிய சதிகாரன் மருத்துவ மாணவனை கைது செய்தது சிறப்புபடை

புதுடில்லி: டில்லி ஐகோர்ட் வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் முக்கிய சதிகாரன் ஒருவனை தேசிய சிறப்பு படை போலீசார் கைது செய்தனர். கடந்த செப்., மாதம் 7ம் தேதி டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டுவெடித்தது. இதில் 15 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமுற்றனர்.

இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாமல் போலீசார் திணறி வந்தனர். காரணம் கண்காணிப்பு காமிரா இல்லை என்ற குறை கூறப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் குண்டு வெடிப்பு நடந்த விவரம் குறித்து இ.மெயிலில் பரிமாறிக்கொண்டதன் அடிப்படையில் ஆமீர்அப்பாஸ், அபித்ஹூசேன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

இந்நிலையில் காஷ்மீர் எல்லைபகுதியான கிஸ்த்வார் பகுதியை சேர்ந்த வாசீம் என்பவரை கைது செய்துள்ளனர். இவர் வங்கேதேசம் ஹர்கத் அல் ஜிகாத் இஸ்லாமி என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளார். இவன் டில்லி குண்டு வெடிப்புக்கு தேவையான அனைத்து முக்கிய வேலைகளை செய்திருக்கிறான், அப்பாஸ் என்பவனிடம் நடத்திய விசாரணையில் வாசீம் குறித்த தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக வாசிக் அக்ரம் மாலிகை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு டில்லிகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை