உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛சர்க்கரை அளவை அதிகரிக்க சிறையில் இனிப்பு சாப்பிடுகிறார்: கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை புகார்

‛சர்க்கரை அளவை அதிகரிக்க சிறையில் இனிப்பு சாப்பிடுகிறார்: கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ நீரிழிவு நோயாளிகள் வழக்கமாக சாப்பிடும் உணவை சாப்பிடாமல், சிறையில் இனிப்பு, மாம்பழம் ஆகியவற்றை கெஜ்ரிவால் சாப்பிடுகிறார்'. வேண்டுமென்றே ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கப் பார்க்கிறார்', என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

வழக்கு

டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், தனது குடும்ப டாக்டருடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்துரையாட அனுமதிக்கும்படி டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு இன்று( ஏப்.,18) விசாரணைக்கு வந்தது.

எதிர்ப்பு

அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜூஹைப் ஹூசைன் கூறியதாவது: கெஜ்ரிவால், உடல்நிலையை பற்றி கவலைப்படாமல், இனிப்புகள் மற்றும் மாம்பழங்களை எடுத்துக் கொள்கிறார். கெஜ்ரிவாலின் உணவுப்பட்டியலை நீதிமன்றம் முன்பு சமர்ப்பித்து உள்ளோம். வழக்கமான நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் உணவை கெஜ்ரிவால் எடுத்துக் கொள்வது இல்லை. அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவரது உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். வேண்டுமென்றே ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் பெற முயற்சி செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

உடல்நலன் பாதிக்கும்

இதற்கு பிறகு, நீதிமன்ற வளாகத்தில் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர்கள் கூறியதாவது: டாக்டர்கள் பரிந்துரை செய்த உணவைத் தான் கெஜ்ரிவால் சாப்பிடுகிறார். நீதிமன்ற உத்தரவுப்படி வீட்டில் இருந்து தயாரித்து கெஜ்ரிவாலுக்கு உணவு வழங்கப்படுவதை தடுக்க அமலாக்கத்துறை சதி செய்கிறது. இது அவரின் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

nv
ஏப் 19, 2024 00:03

இவன் எதையும் செய்வான்.. தீ மு கா வின் சீடன்.. விஞ்ஞான ஊழல் செய்வது எப்படி என்று இவர்களிடம் தான் கற்று அறிந்தான்.. குருவை மிஞ்சும் சிஷ்யன்..


Azar Mufeen
ஏப் 18, 2024 23:31

கெஜ்ரிவால் அவர்களே 7.5லட்சம் கோடி ஊழல் செய்த பிஜேபி கட்சியை துடைப்பத்தால் விரட்டி அடிக்கப்படவேண்டும் இது தெரிந்துதான் கம்பிர் அவர்கள் விலகிகொண்டார்.எங்கே உடல்நிலையை காரணம் காட்டி தேர்தலுக்கு முன்னரே வெளியே வந்துவிட்டால் பிஜேபிக்கு பேதியாகாதா. அலறுவது அமலாக்காத்துறையா அல்லது பிஜேபியா


Rpalnivelu
ஏப் 18, 2024 21:47

அன்னா ஹசாருகே நாமம் சாத்தியவன் இந்த போர்ஜரிவால்


Jai
ஏப் 18, 2024 21:38

அவ்வளவு கஷ்டம் எல்லாம் தேவையில்லை. நமது பொன்முடியார் தண்டிக்கப்பட்ட போதும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை சிறப்பான முறையில் கண்டறிந்து அதன் வழியாக வெளிவந்து மீண்டும் அமைச்சர் ஆகி உள்ளார். ஆகவே, தண்டனைக்கு ஏன் பயப்பட வேண்டும்?


Baskaran
ஏப் 18, 2024 21:11

நாடு முழுவதும் கெஜ்ரிவால் ஒரே ஆள் போதும் சர்க்கரை சப்ளை செய்ய சர்க்கரை ஆலை எல்லாம் இழுத்து மூடிவிடலாம்


rsudarsan lic
ஏப் 18, 2024 21:03

ஜாமீன் கிடக்கட்டும் நீங்க என்னய்யா செய்றீங்க? கேஜரிவால் தேர்தல் வரைக்கும் உள்ள இருக்கணும் என்கிற ஒரே நோக்கத்துக்கு காவல் காக்கும் விசுவாசிகள்


Rpalnivelu
ஏப் 18, 2024 21:45

ஊழலுக்கு சோம்பு தூக்கும் விசுவாசியா?


R Kay
ஏப் 18, 2024 19:24

எப்படியும் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின் சாப்பிட இயலாது இப்போதாவது இனிப்பு சாப்பிடட்டும் படித்த குற்றவாளி


duruvasar
ஏப் 18, 2024 19:11

சினிமாவில் காட்டப்படும் மோசமான வில்லன்களின் கோரமான குணங்களைவிட படுபயங்கரமான குணங்களை கொண்ட ஒரு கொடிய விஷ ஜந்து


NAGARAJAN
ஏப் 18, 2024 18:10

இந்த அமலாக்கத்துறை ஒன்றும் யோக்கியமான துறை அல்லவே அயோக்கிய சிகாமணிகள் அதிகமாக இருக்கும் மத்திய அரசு கைப்பாவையாக உள்ள துறை ஆயிற்றே


Subbu
ஏப் 18, 2024 18:08

இவர் கட்டுமரத்துக்கே தாத்தாவா இருப்பார் போல


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி