உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்மார்ட்போன்களில் சஞ்சார் சாத்தி செயலி; சைபர் குற்றங்களை தடுக்க மத்திய அரசு உத்தரவு

ஸ்மார்ட்போன்களில் சஞ்சார் சாத்தி செயலி; சைபர் குற்றங்களை தடுக்க மத்திய அரசு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் விற்கப்படும் அனைத்து வகை ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி என்ற செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. புதுப்புது ஐடியாக்களுடன் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும், அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.இந் நிலையில், சைபர் குற்றங்களில் இருந்து பயனாளிகளை காக்கும் வண்ணம், மத்திய தொலை தொடர்பு அமைச்சகம் ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது. சைபர் குற்றங்கள், ஹேக்கிங், ஆன்லைன் மோசடிகள் உள்ளிட்டவற்றை தடுக்கும் நோக்கில், புதியதாக விற்கப்படும் அனைத்து வகை ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) எனப்படும் செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் உத்தரவிட்டுள்ளது.ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களுக்கு மத்திய தொலைதொடர்வு அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. நவ.28ம் தேதியே மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு அனுப்பப்பட்டு விட்டது. மேலும், புதிய செல்போன்களில் இந்த செயலியை நிறுவ, 90 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களிலும், இந்த செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ