உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹாசன் மக்கள் வளர்ச்சிப் பணிகளை செய்யாதவர்களை நேரடியாக கண்டிப்பவர்கள்

ஹாசன் மக்கள் வளர்ச்சிப் பணிகளை செய்யாதவர்களை நேரடியாக கண்டிப்பவர்கள்

காவிரி நீர்ப்படுகையில் விவசாயம் செய்யும் ஹாசன் மக்கள், வளர்ச்சிப் பணிகளை செய்யாதவர்களை நேரடியாக கண்டிப்பவர்கள். பிடிக்காதவர்களுக்கு நெத்தியடி கொடுப்பவர்கள். விரும்பியவர்களை அரவணைப்பவர்கள் என்பது காலம், காலமாக உள்ள நடைமுறை.ஹாசன் மாவட்டத்தின் ஸ்ரவணபெளகொலா, அரசிகெரே, பேலுார், ஹாசன், ஹொளேநரசிபுரா, அரகலகூடு, சக்லேஸ்பூர் - தனி, சிக்கமகளூரு மாவட்டத்தின் கடூர் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது.இத்தொகுதி உருவான, 1957ல் இருந்து நடந்த 18 லோக்சபா தேர்தல்களில், காங்கிரஸ் - 8, ம.ஜ.த., - 4, ஜனதா தளம் - 3, சுதந்திரா கட்சி, இந்திரா காங்கிரஸ், பாரதிய லோக் தள் ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா 1991, 1998ல் ஜனதா தளம் சார்பிலும், 2004, 2009, 2014ல் ம.ஜ.த., சார்பில் போட்டியிட்டு 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றார். 1999ல் தோல்வியடைந்தார். 2019ல் அவரது பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தொகுதியை விட்டுக் கொடுத்து, வெற்றி பெறச் செய்தார்.ம.ஜ.த., சார்பில், இரண்டாவது முறையாக பிரஜ்வல்; காங்கிரஸ் சார்பில், ஸ்ரேயஷ் படேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவரும் செல்வாக்குமிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், போட்டி கடுமையாக இருக்கும்...................................பிரஜ்வல் ரேவண்ணா, ம.ஜ.த.,பார்லிமென்டில் தற்போதைய எம்.பி., பங்களிப்புவருகை பதிவு 55%பங்கெடுத்த விவாதம் 2எழுப்பிய கேள்விகள் 89...............................மொத்த வாக்காளர்கள் 17,24,908ஆண்கள் 8,58,661பெண்கள் 8,66,206மூன்றாம் பாலினம் 41.................................லோக்சபா தேர்தலில் ஓட்டு சதவீதம்2014: 73.49%2019: 77.35%.............................................2014 தேர்தலில் முதல் மூன்று இடங்கள்......................................................தேவகவுடா, ம.ஜ.த.,ஓட்டுகள்: 5,09,841மஞ்சு, காங்.,ஓட்டுகள்: 4,09,378விஜயசங்கர், பா.ஜ.,ஓட்டுகள்: 1,65,688......................................2019 தேர்தலில் முதல் மூன்று இடங்கள்....................................................பிரஜ்வல் ரேவண்ணா, ம.ஜ.த.,ஓட்டுகள்: 6,76,606மஞ்சு, பா.ஜ.,ஓட்டுகள்: 5,35,382வினோத்ராஜ், பகுஜன் சமாஜ்ஓட்டுகள்: 38,761...............................முக்கிய பிரச்னைகள்:* ஆலுார், பேலுார், சக்லேஸ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மனிதர்கள் மீது வன விலங்குகள் தாக்குதல்* தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இல்லாததால் இளைஞர்களுக்கு வேலையின்மை* மாவட்ட தலைநகரில் இருந்து, மற்ற தாலுகாக்களுக்கு தரமான சாலை இணைப்பு தேவை* ஹாசன் நகர பகுதிகளில் தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது* ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், இன்னும் குடிநீர் பிரச்னையை சந்திக்கின்றனர்* தென்னை சாகுபடி அதிகம். கொப்பரை தேங்காய்க்கு உரிய ஆதரவு விலை கிடைக்காமல் இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக அவதி* அரசு நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அந்த நிலம் சொந்தமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இன்னும் நிறைவேற்றப்படவில்லை* மழைக் காலங்களில் காபி தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமடைகின்றன* ஹாசன் சக்லேஸ்பூர் இடையே நடந்து வரும் நான்கு வழிச்சாலை தாமதம்................................படங்கள்...............................2024 பிரதான கட்சி வேட்பாளர்களின் விபரம்படம்: 27_Prajwar Revannaபிரஜ்வல் ரேவண்ணாவயது: 33, ம.ஜ.த.,பலம்:முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். தந்தை ரேவண்ணா, தாய் பவானி, தம்பி சூரஜ் ஆகிய மூவரும் அரசியலில் உள்ளனர். எட்டில் நான்கு தொகுதிகளில் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். பா.ஜ., கூட்டணியால் கூடுதல் பலம் கிடைக்கும்.பலவீனம்:வாரிசு அரசியல் என்ற சாயம். பார்லிமென்டில் இரண்டு விவாதங்களில் மட்டுமே பங்கேற்றதாக மக்கள் குமுறல். சொந்த கட்சி பிரமுகர்கள் பணியாற்றுவரா என்ற சந்தேகம் உள்ளது. எதிர்பார்த்த வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை.........................................படம்: 27_Shreyas Patelஸ்ரேயஷ் படேல்,வயது: 32, காங்.,பலம்:முன்னாள் காங்கிரஸ் எம்.பி., புட்டசாமி கவுடாவின் பேரன். அவர், தேவகவுடாவை தோற்கடித்தவர். கடந்த சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு சொற்ப ஓட்டுகளில் தோல்வியடைந்தார். தோற்றாலும் மக்களிடையே நல்ல தொடர்பில் உள்ளார்.பலவீனம்:காங்கிரஸ் அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடையவில்லை. தேவகவுடா பேரனை எதிர்கொள்ள கூடுதல் பலம் தேவை. போதிய அனுபவம் இல்லாததால், உட்கட்சி பிரச்னையை சமாளிப்பாரா என்பது கேள்விக்குறி.***- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை