உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "வெறுப்பை அன்பினால் மட்டுமே ஒழிக்க முடியும்": சொல்கிறார் ராகுல்

"வெறுப்பை அன்பினால் மட்டுமே ஒழிக்க முடியும்": சொல்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சூரஜ்பூர்: வெறுப்பை அன்பினால் மட்டுமே ஒழிக்க முடியும் என சத்தீஸ்கர் மாநிலத்தில் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின் போது உள்ளுர் மக்களுடன் காங்.,எம்.பி ராகுல் பேசுகையில் குறிப்பிட்டார்.சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தில் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின் போது உள்ளூர் மக்களுடன் ராகுல் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: நீங்கள் ஆதிவாசி அல்ல, வனவாசி என்று பா.ஜ., கூறுகிறது. இது பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இதன் பொருள் நீங்கள் காட்டில் மட்டுமே வாழ வேண்டும் என்பது ஆகும். உங்கள் குழந்தைகள் மருத்துவர், வழக்கறிஞர் ஆக கூடாது என பா.ஜ.,வினர் நினைக்கின்றனர்.அன்பினால் மட்டுமே வெறுப்பை ஒழிக்க முடியும். இந்தியாவில் எங்கு பார்த்தாலும் அதானியின் பெயர்தான் தெரியும். துறைமுகங்கள், விமான நிலையங்கள், உள்ளிட்ட அனைத்தையும் அதானியிடம் பா.ஜ., அரசு ஒப்படைத்துள்ளது. பழங்குடியினர் இந்தியாவின் முதல் உரிமையாளர்கள். இந்தியாவில் பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் மொத்த மக்கள் தொகை 88 சதவீதம் ஆகும். இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

பேசும் தமிழன்
பிப் 13, 2024 23:46

அப்போ எதுக்கு நீங்கள் எப்போது பார்த்தாலும்....மதம்..... ஜாதி..... பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறீர்கள் ??? நாட்டு மக்களை .. மத அடிப்படையில் பிரிப்பது நீங்கள் தானே !!!!


Priyan Vadanad
பிப் 13, 2024 20:30

அடுத்த காந்தி வந்துட்டாரய்யா அரசியல் நடத்த தெரியவில்லை ஆன்மீக சொற்பொழிவு நடத்த வந்துட்டார். அரசியலுக்கு அன்பு தேவையில்லை. திருட்டுத்தனமும் புத்திசாலித்தனமும்தான் தேவை என்பதை இன்று வரை புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் இவர் என்ன அரசியல்வாதி?


visu
பிப் 13, 2024 18:40

என்ன உளறல் அப்ப ஏன் அதானியை வெறுக்குறீங்க அவரிடம் அன்பை காமிக்கலாமே


vijay
பிப் 13, 2024 18:01

புல்லரிக்குதே ராகுலின் வார்த்தைகளை கேட்டால். வெறுப்பை நாட்டுக்குள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் சென்று விதைத்து வரும் ராகுல் அண்ணன் இதை சொல்வது வேடிக்கை.


C.SRIRAM
பிப் 13, 2024 17:24

தான் எங்கு போனாலும் வெறுப்பை விதைக்கிறார் .


Bellie Nanja Gowder
பிப் 13, 2024 17:12

:"வெறுப்பை அன்பினால் மட்டுமே ஒழிக்க முடியும்": சொல்கிறார் ராகுல்..." ஆம் அதை நீங்கள் மோடியிடம் கற்று கொள்ள வேண்டும்.


duruvasar
பிப் 13, 2024 16:31

தெற்கே சனாதனம் ஒழிப்பு வட கிழக்கே வேறுப்பு ஒழிப்பு , எவனுக்கும் வாயில் பாசிட்டிவான வார்த்தைகளே வராது போலும்.


Gopal
பிப் 13, 2024 16:30

கொசு தொல்லை தாங்க முடியவில்லை.


john
பிப் 13, 2024 16:28

அன்பு பத்தி தயவு செய்து நீங்க பேசாதீங்க ஒட்டுமொத்த இலங்கை தமிழர்கள் அழிவுக்கு முக்கிய காரணம்


Niram Integrated Farm
பிப் 13, 2024 16:24

0 ....


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி