உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானாவில் ஹூக்கா பார்களுக்கு தடை

தெலுங்கானாவில் ஹூக்கா பார்களுக்கு தடை

ஹைதராபாத் : தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று சபை கூடியதும் முதல்வர் ரேவந்த் ரெட்டி சார்பில் சட்டசபை விவகாரங்கள் துறை அமைச்சர் ஸ்ரீதர் பாபு, புகையிலைப் பொருட்கள் திருத்தச் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.அப்போது அவர் கூறுகையில், “இளம் தலைமுறையினரை பாதிக்கக்கூடிய ஹூக்கா பார்களுக்கு தடைவிதிக்கப்படும். சிகரெட் புகைப்பதை விட, ஹூக்கா அதிக தீங்கு விளைவிக்கக்கூடியது,'' என்றார்.இதையடுத்து, இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு வாயிலாக ஒரு மனதாக சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Hari Bojan
பிப் 13, 2024 15:27

இங்கோ கஞ்சாவை ஒழித்துவிட்டோம் என கூறுபவர்கள், எங்கே எத்தனை கஞ்சா கடைகள் இருக்கின்றன என அறிந்தும் கண்டுகொள்வதில்லை. எல்லாம் கமிஷன்தான் காரணம்


duruvasar
பிப் 13, 2024 12:03

இது மதசார்பற்ற நாடு என்பதை மறந்து சங்கிபோல செயல்படுகிறீர்கள். இது நல்லதல்ல. நீங்கள் எ பி விபி மாணவர் பிரிவிலிருந்து வந்தவர் என்பதை உறுதி செய்து விடீர்களே


g.s,rajan
பிப் 13, 2024 11:23

It is Definitely a Good Decision to Ban Hookah.


Barakat Ali
பிப் 13, 2024 08:44

முஸ்லீம் பெண்மணிகளும் ஹூக்கா புகைப்பதுண்டு ......


ராஜா
பிப் 13, 2024 07:38

சிறுபான்மையினருக்கு எதிரான அரசுகளை கண்டிக்கிறேன்.


Ramesh Sargam
பிப் 13, 2024 07:20

கர்நாடகாவில் போனவாரம் இந்த முடிவை எடுத்தார்கள். தமிழகத்திலும், கேரளாவிலும் எடுப்பார்களா?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை