உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவி கொலை கணவர் கைது

மனைவி கொலை கணவர் கைது

நெலமங்களா: தம்பதியிடையே ஏற்பட்ட மோதல், மனைவியின் கொலையில் முடிந்தது.பெங்களூரு ரூரல், நெலமங்களாவின், கோரினபெலே கிராமத்தில் வசித்தவர் பாக்யம்மா, 35. இவர் பியூட்டி பார்லரில் பணியாற்றினார். ஏற்கனவே திருமணமாகி, கணவரை பிரிந்த இவர், ரமேஷ், 40, என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.ஆரம்பத்தில் தம்பதி, அன்யோன்யமாக இருந்தனர். ஆனால், சமீப நாட்களாக சிறு, சிறு விஷயத்துக்கும் வாக்குவாதம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் இருவருக்கும் ஏதோ காரணத்தால் சண்டை நடந்தது.அப்போது கோபமடைந்த ரமேஷ், கத்தியால் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்தார். தகவலறிந்து அங்கு சென்ற நெலமங்களா போலீசார், ரமேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ