உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழல் என்ற கரையானை ஒழிக்கவே உழைக்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு

ஊழல் என்ற கரையானை ஒழிக்கவே உழைக்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''ஊழல் என்பது ஒரு கரையான். இந்த தேசத்தை ஊழலில் இருந்து விடுவிக்கவும், ஊழலுக்கு எதிரான வெறுப்பை சாமானியர்களின் மனதில் வளர்க்கவும் நான் முழு மனதுடன் உழைக்கிறேன்'' என ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசினார்.ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி அளித்த பதிலுரை: பொய்யை மட்டும் பரப்பியவர்கள் அவையில் உண்மையை ஏற்க மறுக்கிறார்கள். உண்மையை எதிர்கொள்ள முடியாமல் வெளிநடப்பு செய்துள்ளார்கள். மக்கள் பிரச்னைகளை பேச அவையில் அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. ஆனால், மக்கள் பிரச்னைகளை பேச எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை என்பதால் வெளிநடப்பு செய்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vdijtw6r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அரசியலமைப்பு

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை விவகாரங்களில் எதிர்க்கட்சிகளின் நிலை கவலைப்படும் வகையில் இருக்கிறது. மேற்குவங்கம் மாநிலம் சந்தேஷ்காலியில் ஒரு பெண்ணை தாக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்தேன். அதுபற்றி எதிர்க்கட்சியில் உள்ள சீனியர் தலைவர்களும் ஒருவார்த்தை கூட பேசவில்லை. 1975ல் அரசியலமைப்பை தகர்த்து எமர்ஜென்சியை கொண்டுவந்தது காங்கிரஸ். எமர்ஜென்சியில் இருந்து 1977 தேர்தல் தான் அரசியலமைப்பை காப்பாற்றியது. அரசியலமைப்பை பாதுகாக்க தான் மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

காங்., மகிழ்ச்சி ஏன்

காங்கிரஸ், நாட்டை தவறாக வழிநடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பங்குச்சந்தைகள் உயர்வை கண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் ஏன் மகிழ்ச்சியாக இருந்தது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. 'ஹாட்ரிக்' தோல்வி அடைந்ததாலா? 90 இடங்களுக்கு மேல் வென்றதாலா? காங்., தலைவர் கார்கே கூட முழு உத்வேகத்துடன் இருந்ததை பார்த்தேன். தோல்விக்கு யாரோ ஒருவர் (ராகுல்) மீது பழி விழுந்துவிடக் கூடாது என்பதற்காக சுவர் போல பாதுகாத்தார். இதுபோன்ற சூழ்நிலையின்போது காங்கிரஸை சேர்ந்த குடும்பம், தலித்களையோ, பிற்படுத்தப்பட்டோரையோ தான் பயன்படுத்திக்கொள்ளும். லோக்சபா சபாநாயகர் தேர்தலில் கூட தோற்றுவிடுவோம் எனத் தெரிந்தும் தலித் வேட்பாளரை போட்டியிடவைத்தனர். அதேபோல், 2022ல் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலிலும் சுஷில் குமார் ஷிண்டேவை நிற்க வைத்தனர்; 2017ல் மீரா குமாரரை நிற்க வைத்தனர். எஸ்சி, எஸ்டி, ஓபிசி.,க்கு எதிரான மனநிலையிலேயே காங்கிரஸ் இருக்கிறது.

இரட்டை நிலைப்பாடு

அதே மனநிலையில் தான் ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோரையும் கேட்க முடியாத வார்த்தைகளால் கூட காயப்படுத்தினர். காங்கிரசின் இரட்டை நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறேன். டில்லியில் ஊழல்வாதிகளை காப்பாற்றுவதற்காக காங்., ஆம்ஆத்மி இணைந்து பேரணி நடத்தின; அமலாக்கத்துறை, சிபிஐ., தவறாக வழிநடத்தப்படுவதாக கூறினர். அவர்களே, கேரளாவில் அமலாக்கத்துறை, சிபிஐ மூலமாக கேரள முதல்வரை கைது செய்யுமாறு கூறினர். சத்தீஸ்கரில் காங்கிரஸ் முதல்வராக இருந்தவருக்கு மதுபான ஊழலில் தொடர்பு இருப்பதாகவும் அவர்களை அமலாக்கத்துறை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் ஆம்ஆத்மி கூறியது. அப்போது மட்டும் அவர்களுக்கு அமலாக்கத்துறை பிரியமானவர்களாக தெரிந்துள்ளனர். ஆம்ஆத்மி ஊழல் செய்வதாகவும், மதுபான ஊழலில் ஈடுபட்டதாகவும் காங்கிரஸ், செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம்சாட்டியது. பிறகு இருவரும் கூட்டணி வைத்துக்கொண்டுள்ளனர். இப்போது சொல்லுங்கள், ஆம்ஆத்மி மீது நீங்கள் (காங்.,) வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையா? இல்லையா?.

ஊழல்

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த பணிகளை, காங்கிரஸ் செய்திருந்தால் 20 ஆண்டுகள் எடுத்திருக்கும். என்னைப் பொறுத்தவரை, ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது தேர்தல் வெற்றி அல்லது தோல்விக்கான அளவுகோல் அல்ல. தேர்தலில் வெற்றி பெறுவதற்கோ, தோற்க வேண்டும் என்பதற்காக மட்டும் நான் ஊழலை எதிர்த்துப் போராடவில்லை. ஊழல் என்பது ஒரு கரையான் என்று நான் நம்புகிறேன். இந்த தேசத்தை ஊழலில் இருந்து விடுவிக்கவும், ஊழலுக்கு எதிரான வெறுப்பை சாமானியர்களின் மனதில் வளர்க்கவும் நான் முழு மனதுடன் உழைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

பேசும் தமிழன்
ஜூலை 03, 2024 20:29

நீங்கள் ஊழல் பேர் வழிகளை ஒரு வழி பண்ணுங்கள்...... நாட்டு மக்கள் அனைவரும் உங்கள் பின்னால் இருக்கிறார்கள்.


venugopal s
ஜூலை 03, 2024 19:35

இன்னுமா இந்த நாடு நம்பளை நம்புகிறது என்கிறது அவர் மைண்ட் வாய்ஸ்!


கனோஜ் ஆங்ரே
ஜூலை 03, 2024 17:26

-////ஊழல் என்ற கரையானை ஒழிக்கவே உழைக்கிறேன்-/// ஒழிக்கறேன்னு சொல்ற நீங்க, “ ரூ70,000 கோடி நீர்ப்பாசன ஊழல் புகாரில் சிக்கிய அஜித்பவாரை கூட்டணியில் சேர்த்து துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருக்கிறீர்களே... அய்யா. இதுதானா அய்யா... ஊழல் என்ற கரையானை ஒழிக்கவே உழைக்கிறது.


கனோஜ் ஆங்ரே
ஜூலை 03, 2024 17:21

////மேற்குவங்கம் மாநிலம் சந்தேஷ்காலியில் ஒரு பெண்ணை தாக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்தேன்-//// அய்யா... அப்ப மணிப்பூரில் நடைபெற்ற கலவர வீடியோவை சமூக வலைதளத்தில் பார்க்கவே இல்லையாய்யா...? இது எப்படி இருக்குன்னா... ஸ்டெர்லைட் கலவரத்தில் துப்பாக்கி சூடு நடந்தபோது... செய்தியாளர்கள் அன்றைய முதலமைச்சர் எடப்பாடியாரை கேட்டபோது... நானும் தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்னு... சொன்னது மாதிரி நீங்களும் மேற்கு வங்க மாநில கலவரத்தைப் பத்தி சொல்றீங்களே... அய்யா.


சைலேஷ்சிங்
ஜூலை 03, 2024 17:13

கரையானை ஒழிக்கப்.போய் எலக்ஷன் பத்திரம்னு கேன்சரை உருவாக்குட்டீங்களே . அது நாட்டையே கொன்னுடும்.


Kanagaraj M
ஜூலை 03, 2024 17:03

ஒருவர் ஊழலை ஒழிக்கிறேன் என்று சொல்பவரை நம்பக்கூடாது என 2000 வருடம் முன்னால் திருவள்ளுவரே கூறியுள்ளார்.


Mario
ஜூலை 03, 2024 16:45

வாஷிங் மெசின்


Indian
ஜூலை 03, 2024 16:41

மக்களிடம் பேராசை குறையாதவரை ஊழலை ஒழிக்க முடியாது


N Sasikumar Yadhav
ஜூலை 03, 2024 16:02

திருட்டு திமுக மற்றும் அதிமுக மற்றும் ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் களவானிங்க ஜெயிலுக்கு போனால்தான் நம்பிக்கை வரும்


SUBBU,MADURAI
ஜூலை 03, 2024 15:50

ஊழல் கரையானை ஒழிக்க பாடு படுவதாக சொல்லும் மோடி இந்த பத்தாண்டு கால அவருடைய ஆட்சியில் யாருடைய ஊழலை நிரூபித்து அவர்களை சிறைக்கு அனுப்பியிருக்கிறார்? ஏற்கனவே குற்றம் செய்து அது நிரூபிக்கப் பட்டு நீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப் பட்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டு ஜாமீன் இருக்கும் லாலு பிரசாத் யாதவ், சோனியா, ராகுல்காந்தி வழக்கான நேஷனல் ஹெரால்டு, மம்தா அரசின் ஊழல் வழக்குகள், எல்லாத்துக்கும் மேலாக 2G வழக்கில் சிக்கியுள்ள ஆ.ராசா மற்றும் கனிமொழி இவர்கள் அனைவரின் வழக்குகளையும் துரிதப் படுத்தி நடத்தாமல் அவையனைத்தையும் கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பில் போட்டு விட்டு இப்போது அறிக்கைகளை விடுவதை பார்த்தால் மிஞ்சுகிறது.


Narayanan Muthu
ஜூலை 03, 2024 20:15

கடந்த பத்தாண்டுகளில் அவர் செய்த ஊழல்கள் சந்தி சிரிக்கிறது.. ஒரு மெகா ஊழல் ஊழல் குறித்து பேசுவது வியப்பாக உள்ளது. தேர்தல் ஆணையம் மட்டும் இவருக்கு சாதகமாக இல்லாமல் இருந்திருந்தால் இவர் செய்த ஊழல்கள் இவரை பதவியிலிருந்து தூக்கி இருந்திருக்கும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை