உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான் உயிருடன் இருக்கும் வரை சி.ஏ.ஏ., சட்டத்தை அனுமதிக்கமாட்டேன்

நான் உயிருடன் இருக்கும் வரை சி.ஏ.ஏ., சட்டத்தை அனுமதிக்கமாட்டேன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா : நான் உயிருடன் இருக்கும் வரை என் மாநிலத்தில் சி.ஏ.ஏ. சட்டத்தை அனுமதிக்கமாட்டேன் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து, அகதிகளாக நம் நாட்டில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், சமணர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்க மோடி அரசு முடிவு செய்தது.இதற்காக குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வந்தது. அது, 2019ல் பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேறியது. ஜனாதிபதியும் உடனடியாக ஒப்புதல் அளித்ததால், சட்டம் ஆனது மசோதா. ஆனால், இதுவரை அந்த சட்டம் நடைமுறைக்கு வரவில்லை.இது குறித்து தெற்குபர்கானா 24 மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்குர் நடைமுறைக்கு வராத சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம், இன்னும் ஏழு நாட்களுக்குள் அமலுக்கு வந்துவிடும் என்றார். லோக்சபா தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்ற சூழலில், இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் உத்தர் தினாஸ்பூர் மாவட்டம் ராய்கஞ்ச் மாவட்டத்தில் அரசு நலத்திட்டங்களை துவக்கி வைத்து முதல்வர் மம்தா பானர்ஜி பேசியது, சி.ஏ.ஏ.,சட்டத்தை அமல்படுத்த போவதாக அறிவித்து நான்கு ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு இப்போது அதை மத்தி அரசு கையில் எடுத்திருப்பது தேர்தல் ஆதாயத்திற்காக தான் என்பது தெரிகிறது. நான் உயிருடன் இருக்கும் வரை சி.ஏ.ஏ., சட்டத்தை மேற்குவங்க மாநிலத்தில் அனுமதிக்கமாட்டேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Kannan
ஜன 31, 2024 17:24

உங்கள் உயிர்... உங்கள் உரிமை.. ஆனால்.. பொது சிவில் சட்டம் எங்களுக்கு வேண்டும் .


Muralidharan S
ஜன 31, 2024 15:46

நமது பாரத தேசத்தில் உள்ள எதிர் (எதிரி) கட்சிகள், ஏதோ ஒரு மிகப்பெரிய திட்டத்தோடு / முடிவோடு பெரும் 'சதி' வலை பின்னிக்கொண்டு இருக்கிறார்கள்..


Muralidharan S
ஜன 31, 2024 15:40

அது எப்படி அமல்படுத்துவார்.. ??? மேற்கு வங்கத்தில் பெரும் பங்கு வாக்காளர்கள், சட்ட விரோதமாக குடியேறியவர்கள். அவர்களுக்கு ஆதார் அட்டை முதல், ரேஷன் கார்டு , வாக்காளர் அட்டை வரை எல்லாம் பெற்று தந்து திரிணாமூல் கான்-கிராஸ் கட்சிக்கு ஒரு பெரும் ஒட்டு வங்கியை நிரந்தரமாக உருவாக்கி வைத்து இருக்கிறார்கள் இந்த பத்து ஆண்டுகளில். திரிணாமூல் கான்-கிராஸ் திரும்ப திரும்ப மெஜாரிட்டி உடன் ஆட்சிக்கு வருவது இந்த சட்ட விரோத வாக்காளர்களால்தான். பிஜேபி அதன் அஸ்திவாரத்தையே அசைத்து பார்க்க, இந்த அம்மையார் எப்படி விடுவார்...??


Amjath
ஜன 31, 2024 13:49

போய் தொலை....


Sridhar
ஜன 31, 2024 13:29

சட்டம் என்னமோ அமல்படுத்தத்தான் போறாங்க. உயிர வச்சுக்கிறதா விடுரதாங்கறது உங்க விருப்பம். அதுல நாங்க யாரும் தலையிட முடியாது. வச்சுக்கறதா முடிவு பண்ணினீங்கன்னா வருத்தப்பட மாட்டோம்.


Sivagiri
ஜன 31, 2024 12:42

முதலில் இவர் பூர்வீகம் - , நதி மூலம் ரிஷிமூலம் - சரி பார்க்க வேண்டியது ,


Sivagiri
ஜன 31, 2024 12:39

அங்க என்ன சத்தம் ? . . . ஒன்னும் இல்ல மாமா சும்மா பேசிட்டிருந்தேன் . ..


saravan
ஜன 31, 2024 10:52

யாரு இருக்க சொன்நா


வாய்மையே வெல்லும்
ஜன 31, 2024 10:11

இனிமே பிற்படுத்தப்பட்ட மாநிலங்களில் வந்த பாரத் ரயில் ஓட்டுநர் ஹெல்மெட் போட்டுகொண்டு வண்டி ஓட்டுவது நல்லது.. டிரைவர் மண்டையை உடைக்க கூட தயங்கமாட்டார்கள். அதே மாதிரி எல்லா கண்ணாடி ஜன்னல்களில் இரும்பு சல்லடை போடுவது முக்கியம்.. கொஞ்சம் அழகு குறையும்.. பரவாயில்லை.. மக்களின் உயிர் உடமைகள் நமது பிரதான குறிக்கோள்..


Dharmavaan
ஜன 31, 2024 09:43

அனுமதிக்க இவள் யார் மத்திய அரசு நாடு முழுதுக்கும் சொல்லும் சட்டம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை