மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
9 hour(s) ago | 2
பெங்களூரு: கர்நாடகாவில், நடப்பாண்டு துவக்கத்திலேயே, டெங்கு காய்ச்சல் அதிகரிக்கிறது.கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தகவலின்படி, 2023ம் ஆண்டில் 16,500க்கும் மேற்பட்டோருக்கு, டெங்கு காய்ச்சல் உறுதியானது. ஒன்பது பேர் உயிரிழந்தனர். நடப்பாண்டு டெங்கு அறிகுறி இருந்த, 11,389 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 6,010 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.சித்ரதுர்காவில் 79, மாண்டியாவில் 54, ஷிவமொகாவில் 46, துமகூரில் 42, கொப்பாலில் 41, ஹாசனில் 34, தட்சிண கன்னடாவில் 34, விஜயபுராவில் 34 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது.டெங்கு தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கடந்த 44 நாட்களில் 575 பேருக்கு டெங்கு உறுதியானது. இதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.நடப்பாண்டு 2,151 பேரை பரிசோதித்ததில், 161 பேருக்கு சிக்குன் குனியா உறுதியாகியுள்ளது. ஷிவமொகாவில், அதிகபட்சமாக 35 பேர் சிக்குன் குனியாவால் பாதிப்படைந்து உள்ளனர்.
4 hour(s) ago | 1
9 hour(s) ago | 2