உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  சர்வதேச மாணவர் சேர்க்கை 17 சதவீதம் சரிவு

 சர்வதேச மாணவர் சேர்க்கை 17 சதவீதம் சரிவு

புதுடில்லி: அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் நிதி உதவியுடன் செயல்படும், 'ஓபன் டோர்ஸ் டேட்டா' என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவில் நடப்பு கல்வியாண்டின் முதல் காலாண்டில் அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை, 17 சதவீதம் குறைந்துள்ளது. விசா பிரச்னை, பயண கட்டுப்பாடு போன்றவை இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. அமெரிக்காவின், 61 சதவீத உயர் கல்வி நிறுவனங்கள் இந்திய மாணவர்கள் சேர்க்கை சரிவடைந்ததாக கூறியுள்ளது. இருப்பினும் 2024 - 25 ஒட்டுமொத்த கல்வி ஆண்டில், 3.63 லட்சம் இந்திய மாணவர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி