உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிரட்டும் காங்., எம்.எல்.ஏ., நிகில் குமாரசாமி குற்றச்சாட்டு

மிரட்டும் காங்., எம்.எல்.ஏ., நிகில் குமாரசாமி குற்றச்சாட்டு

பெங்களூரு: ''லோக்சபா தேர்தல் முடிந்த பின், மாநில காங்கிரஸ் அரசு, வாக்குறுதி திட்டங்களை ரத்து செய்யும். இதை தன் எம்.எல்.ஏ., ஒருவரின் வாயால் கூற வைத்துள்ளது,'' என ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தோற்றால் வாக்குறுதி திட்டங்கள் ரத்தாகும் என, மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கூறியதை, கண்டிக்கிறேன். லோக்சபா தேர்தல் முடிந்த பின், ஐந்து திட்டங்களும் ரத்தாகும் என, தன் எம்.எல்.ஏ., வாயால் காங்கிரஸ் கூற வைத்துள்ளது.காங்கிரஸ் அரசின் உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கொடுத்த கையால், அதை பறிக்க முயற்சி நடக்கிறது. முதல்வர், துணை முதல்வரின் உத்தரவு இல்லாமல், எம்.எல்.ஏ., இப்படி கூற முடியுமா. யுத்தத்துக்கு முன்பே காங்கிரஸ் தோல்வியை ஒப்புக்கொண்டது.இதன் மூலம் வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்த முடியாமல் பரிதவிப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பாலகிருஷ்ணா பேச்சு, மக்களை மிரட்டும் வகையில் உள்ளது.'காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு வழங்கும் திட்டங்களை, தயவு, தாட்சண்யமின்றி ரத்து செய்வோம்' என பிளாக்மெயில் செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை