உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிதீஷ், சந்திரபாபுவை வளைத்து போட முயற்சியா?: இல்லை என சாதிக்கிறார் சரத்பவார்

நிதீஷ், சந்திரபாபுவை வளைத்து போட முயற்சியா?: இல்லை என சாதிக்கிறார் சரத்பவார்

புதுடில்லி: 'நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபுவை வளைத்து போட சரத்பவார் முயற்சி செய்வதாக தகவல் வெளியானது. ஆனால், சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமாரிடம் நான் இதுவரை பேசவில்லை' என மஹா., முன்னாள் முதல்வர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், இண்டியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு மொத்தம் 272 இடங்கள் தேவை என்பதால், இண்டியா கூட்டணிக்கு 38 இடங்கள் குறைவாக உள்ளன. இந்த நேரத்தில், சற்றும் எதிர்பாராத விதமாக கூட்டணி மாறி ஆதரவு அளிக்கும் கட்சி தலைவர்கள், 'கிங் மேக்கர்' என்ற அந்தஸ்தை பெறுகின்றனர்.இந்த முறை, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ் குமார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நிதீஷ், சந்திரபாபு மற்றும் சில சுயேச்சைகளை, தங்கள் பக்கம் இழுப்பதற்கான பேரத்தில் இண்டியா கூட்டணி திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமாரை மஹா., முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டதாக செய்திகள் வெளியாகின.இந்நிலையில், நிருபர்கள் சந்திப்பில், ‛‛அடுத்த கட்ட நகர்வு குறித்து இண்டியா கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்படும். ஆதரவு கேட்டு நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை இதுவரை தொடர் கொண்டு நான் பேசவில்லை. அனைத்து சாத்தியக்கூறுகள் குறித்தும் இன்று விவாதிப்போம்'' என சரத்பவார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Vasudevan
ஜூன் 07, 2024 18:37

காங்கிரஸ் அழிக்கப்பட்டது உன்னாலும் மமதை பிடித்த மமதா பாட்டியால். இப்போது ஏன் காங்கிரஸ் பின்னாடி செல்கிறீர்கள்? உங்களுக்கு வெட்கம் கொள்கை என்பதே கிடையாதா?


JEEVAKUMAR RADHAKRISHNAN
ஜூன் 07, 2024 14:11

வளைச்சு போட்டா என்ன போடலன்னா என்ன?


N.G.RAMAN
ஜூன் 05, 2024 19:18

நிதிசும் சந்திரபாபுவும் நிச்சயம் புள்ளிகள் கூட்டணி பக்கம் தற்போது போக மாட்டார்கள் . ஆட்சியில் பங்கு கேட்பதும் சந்தேகம்தான். வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பார்கள். ஒரு வருடம் இப்படியே செல்லும். பின்னர் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் அடிப்படையில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்கள். அதற்குள் பா ஜ முழுமையான மெஜாரிட்டிக்கு தேவையான அனைத்து முயற்சிகளும் செய்து விடும்


durairajdheenadayalan
ஜூன் 05, 2024 17:17

அய்யயோ வேண்டாம், மறுபடியும் தொங்கு பார்லியமென்டரி.


Bala Paddy
ஜூன் 05, 2024 16:22

000


Bala Paddy
ஜூன் 05, 2024 15:02

இந்திய மக்களின் தலை எழுத்து இது.


தத்வமசி
ஜூன் 05, 2024 15:00

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா...


spr
ஜூன் 05, 2024 14:36

நல்ல குடியாட்சிக்கு, வலுவான எதிர்க்கட்சி தேவை அந்த வகையில் மோடி அறுதிப்பெரும்பான்மையாவது பெற்றிருந்தால் நலமாக இருக்கும் "பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ் குமார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இருவருமே கட்சி தாவுவதில் வல்லவர்கள்". . நிதிஷ் குமார் துணைப்பிரதமர் பதவி கேட்கலாம் வழக்குகள் விசாரணையில் இருக்கையில் பாபு நிதி அமைச்சர் பதவியைக் கேட்கலாம்.மோடியின் போதாத காலம் அவர்களுக்கு அந்த வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. இதுதான் வருத்தம் தரும் நிலை. மத்திய அரசில் பாஜகவுக்கு நித்திய கண்டம் பூரண ஆயுசா என்பது போகப் போகத்தான் தெரியும் ஒருவேளை வழக்குகளிலிருந்து பூரண விடுதலை என்றால் கழகம் நிபந்தனையுடன் கூடிய ஆதரவு தரும் ஆ ராசா டி . ஆர் பாலு தயாநிதி மாறன் காட்டில் மழை


ram
ஜூன் 05, 2024 14:33

அவருக்கு தெரியும் 30 கட்சி ஆட்களை வைத்துக்கொண்டு அரசு அமைக்க முடியாது என்று.


Ravichandran S
ஜூன் 05, 2024 16:31

குடுத்துப்பாருங்க தெரியும் இந்த நேரத்தில் மோடி ஆட்சி அமைக்க உரிமை கோராமல் இருப்பது நல்லது. ஆட்சியை இந்தி கூட்டணியிடமே விட்டு விட்டே வேண்டும் தானாகவே கவிழ்ந்து விடும்


Thirunavukkarasu Sivasubramaniam
ஜூன் 05, 2024 14:27

சீச்சீ, இந்த பழம் புளிக்கும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி