மேலும் செய்திகள்
பாலியல் புகாரளித்த பெண்ணை மிரட்டிய கவுன்சிலர் கணவர் கைது
42 minutes ago
உத்தரகண்டில் இனவெறி தாக்குதல் திரிபுரா மாணவர் குத்தி கொலை
43 minutes ago
காங்கிரசுக்கு ஒருபோதும் அழிவே கிடையாது: கார்கே
52 minutes ago
புதுடில்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதற்கு பிந்தைய உடல்நலப் பிரச்னையால் உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு, 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, டில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:கடந்த 2021 ஏப்., 25ம் தேதி, என் கணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு மருத்துவமனையில் இரு மாதங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கொரோனாவுக்கு பிந்தைய உடல்நலப் பிரச்னையால், ஜூன் 19ம் தேதி உயிரிழந்தார். முதல்வரின் கொரோனா இழப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.இதில், டில்லி அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், 'அந்த நபரின் இறப்பிற்கான காரணம் மாரடைப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்து, கொரோனா உறுதியான ஒரு மாதத்துக்குள் உயிரிழக்கும் நபருக்கு மட்டுமே இழப்பீடு வழங்க முடியும்' என தெரிவித்திருந்தது.இந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் உத்தரவிட்டதாவது:மனுதாரரின் கணவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதற்கு பிந்தைய உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொண்டார்.இறப்புக்கான காரணம் மாரடைப்பு என குறிப்பிடப்பட்டு உள்ளதால், கொரோனாவுக்கு பிந்தைய உடல்நலப் பிரச்னையால் உயிரிழக்கவில்லை என, அர்த்தம் கிடையாது.மருத்துவமனையால் வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழிலும், கொரோனாவுக்கு பிந்தைய உடல்நலப் பிரச்னைகளால் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரு வாரங்களுக்குள் மனுதாரருக்கு, 50,000 ரூபாய் இழப்பீட்டை டில்லி அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
42 minutes ago
43 minutes ago
52 minutes ago