மேலும் செய்திகள்
அமெரிக்காவிலிருந்து 18,822 இந்தியர்கள் நாடு கடத்தல்
25 minutes ago
புதுடில்லி: வரும் மார்ச் 2026-க்குள் மத்திய விண்வெளித்துறை சார்பில் ஏழு முக்கிய செயற்கை கோள் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்து உள்ளார்.இது குறித்து மாநிலங்களவையில் எழுப்ப பட்ட கேள்விக்கு எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் அவர் கூறியதாவது:விண்வெளித் துறையில் சீர்திருத்தங்களுக்குப் பிறகு, நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) நிறுவனம், வணிக செயற்கைக்கோள் பயன்பாடுகளின் வெற்றியை உறுதி செய்வதற்கும், உலகளவில் விண்வெளி சந்தையில் இந்தியாவின் போட்டியை முன்னிலை படுத்துவதற்கும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.தொடர்ந்து வரும் 2026-ம் ஆண்டு மார்ச்-க்குள் இஸ்ரோ மூலம் ஏழு செயற்கை கோள்கள் ஏவ பட உள்ளது. இவற்றில் எதிரி நாடுகளிடம் இருந்து நமது கடல் சார் பகுதியை கண்காணிக்கும் வகையில் செயற்கை கோள், புவி கண்காணிப்பு ,வணிக ரீதியிலான செயற்கை கோள் மற்றும் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் வணிக ரீதியிலான செயற்கைகோள் உள்ளிட்ட ஏழு செயற்கை கோள்கள் வரையில் ஏவப்பட உள்ளது.மேலும் கடந்த2004 ம் ஆண்டு முதல் 2013 டிசம்பர் வரையில் 31 வெளிநாட்டு செயற்கை கோள்கள் உட்பட 54 செயற்கை கோள்கள்மட்டுமே ஏவப்பட்டன. அதே நேரத்தில் 2014 நவம்பர் மாதம் முதல் 2025 வரையில் 398 வெளிநாட்டு செயற்கை கோள்கள் உட்பட 454 செயற்கை கோள்கள் இஸ்ரோவால் ஏவப்பட்டுள்ளன என்றார்.
25 minutes ago