மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
1 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை : பெரும் சவால்கள்
3 hour(s) ago | 1
ஆயுத பூஜை விழா
3 hour(s) ago
சாலை பணி துவக்கம்
3 hour(s) ago
கலபுரகி: “ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு, எனக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு வரவில்லை. எனவே நான் அயோத்திக்கு செல்ல மாட்டேன்,” என, காங்கிரஸ் எம்.எல்.சி., ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.கலபுரகியில் நேற்று அவர் கூறியதாவது:ராமர் கோவில் விஷயத்தில், அரசியல் செய்ய கூடாது. நானும் ராம பக்தன். ராமர் கோவில் கட்ட பணம் சேகரித்து தரும்படி கேட்டபோது, 2 கோடி ரூபாய் சேகரித்துக் கொடுத்தேன். கோவில் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில், அழைப்பு வரவில்லை. எனவே, என்னால் அயோத்திக்கு செல்ல முடியாது.வேறு நாளன்று அயோத்திக்கு சென்று, ராமனை தரிசிப்பேன். அழைப்பு வந்தவர்கள் வெவ்வேறு காரணங்களால், அயோத்திக்கு செல்லவில்லை என, காங்கிரசார் கூறினர். இதை பா.ஜ.,வினர் விமர்சிக்கின்றனர்.ராமர் கோவில் திறக்கப்படுவது, மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகும். அழைப்பு வந்தவர்கள் செல்வதும், விடுவதும் அவரவர் விருப்பமாகும். காங்கிரஸ், ஹிந்துக்களுக்கு எதிரானது அல்ல. அப்படி இருந்திருந்தால், 135 தொகுதிகள் எப்படி கிடைத்தன. நான் பா.ஜ.,வுக்கு செல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.என்னை அந்த கட்சி தலைவர்கள் தொடர்பு கொள்ளவில்லை. அப்போது எனக்கு பா.ஜ.,வில் அவமதிப்பு நடந்தது. அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டியிருந்தது; புகட்டினேன். காங்கிரசில் திருப்தியாக இருக்கிறேன். நான் எந்த ஆசையும் வைத்துக்கொண்டு, காங்கிரசுக்கு வரவில்லை. லோக்சபா தேர்தலில் போட்டியிடமாட்டேன் என, பல முறை கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago
3 hour(s) ago | 1
3 hour(s) ago
3 hour(s) ago