உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெகதீஷ் ஷெட்டர் வருகை சோமண்ணா மகிழ்ச்சி

ஜெகதீஷ் ஷெட்டர் வருகை சோமண்ணா மகிழ்ச்சி

பெங்களூரு, -“ஏதோ கோபத்தில் கட்சியை விட்டுச் சென்ற, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், மீண்டும் கட்சிக்குத் திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது,” என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:ஜெகதீஷ் ஷெட்டரும், அவரது குடும்பமும் ஆர்.எஸ்.எஸ்.,சுடன் வளர்ந்து வந்தனர். சங் பரிவாரத்துடன் அடையாளம் கண்டுள்ளது. ஆனால் ஏதோ காரணத்தால், கோபமடைந்து கட்சியை விட்டுச் சென்றிருந்தார். அவரை மீண்டும் கட்சிக்கு அழைத்து வந்த, மேலிடத்தின் முடிவு வரவேற்கத்தக்கது.பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே, நாடு வளர்ச்சி அடைய முடியும் என்பதை, நாட்டின் 142 கோடி மக்கள் உணர்ந்துள்ளனர். அயோத்தியில் ராமரை பார்க்க வேண்டும் என்பது, இந்தியர்களின் நுாற்றாண்டு கனவாக இருந்தது. இந்த கனவை மோடி நனவாக்கினார். எனவே பிரதமர் மீது, மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை